புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரு வழியா சுந்தரிக்கும் வெற்றிக்கும் நல்ல காலம் பிறந்தாச்சு.. கல்யாணத்திற்கு வரும் கார்த்திக் அனு, நெருங்கிய கிளைமாக்ஸ்

Sundari Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சுந்தரி சீரியலில், சுந்தரிக்கும் வெற்றிக்கும் எப்போதுதான் கல்யாணம் என்பதற்கு ஏற்ப இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஒவ்வொரு தடங்களுக்கும் ஏற்ப இவர்களுடைய கல்யாணம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக், சுந்தரி பற்றிய குணங்களை தெரிந்து கொண்டு தற்போது நல்லவராக மாறிவிட்டார்.

ஆனாலும் அணுவை கண்டுபிடித்தாக வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் கார்த்திகை பாதுகாக்கும் பொறுப்பில் ஆசிரமத்தில் இருக்கும் அனு பொறுப்பேற்று இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் எல்லா பிரச்சனையும் சரி செய்து சுந்தரி சீரியல் சுமுகமாக முடிந்து விடும். அதாவது சோசியல் மீடியாவில் சுந்தரி மற்றும் வெற்றிக்கு கல்யாணம் ஆன புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இவர்களுடைய கல்யாணத்துக்கு அணு மற்றும் கார்த்திக் வந்திருக்கிறார்கள். அத்துடன் கல்யாண மேடையில் ஒட்டுமொத்த குடும்பங்களும் சேர்ந்து நிற்கும் தருணத்தில் சுந்தரி சீரியலுக்கு சுபம் போட போகிறார்கள். அதனால் இன்னும் ஒரு சில நாட்களில் சுந்தரி சீரியல் முடிய போகிறது. இதற்கு பதிலாக ராகினி என்ற சீரியல் வரப்போகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவாக கார்த்திக் தான் நடிக்க போகிறார்.

இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் உள்ள இரண்டு ஹீரோயின்கள் கமிட் ஆகி நடித்து வருகிறார்கள். ஒன்று அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் நடித்த கண்மணி, இன்னொரு நடிகை வித்யா என்ற சீரியலில் நடித்த நடிகை. இதிலும் கார்த்திக்கு ரெண்டு பொண்டாட்டி என்பதற்கு ஏற்ப கார்த்திக் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

Trending News