fbpx
Connect with us

Cinemapettai

ஒரு பிச்சைக்காரர் கிட்ட இவ்வளவு பணமா? வடிவேலு காமெடி போல நடந்த உண்மை

India | இந்தியா

ஒரு பிச்சைக்காரர் கிட்ட இவ்வளவு பணமா? வடிவேலு காமெடி போல நடந்த உண்மை

ரயில் பாதையை கடக்கும் போது தண்டவாளத்தில் அடிபட்டு இறந்த ஒரு பிச்சைக்காரனின் அக்கவுண்டில் பல லட்சங்கள் இருந்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் மும்பை அருகே நடைபெற்றிருக்கிறது.

மும்பையின் ஒரு பகுதியான கோவாண்டியில் வசித்து வருபவர் பிச்சைக்காரர், புர்ஜு சந்திர ஆசாத். இவர் அதே பகுதியில் தினமும் காலையில் கிளம்பி பிச்சை எடுத்து விட்டு மாலை வீடு திரும்புவார்.

இதேபோல் ஒரு ரயில் பாதையை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது அவரது பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் சுமார் 8 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் செய்து வைத்துள்ளார். மேலும் ரொக்கமாக 1.5 லட்சத்திற்கும் மேலாக கையில் வைத்திருக்கிறார். இதில் பெரும்பாலும் சில்லறைகள் இருந்தன.

mumbai-begger

mumbai-begger

கஷ்டப்பட்டு இரவு பகலாக வேலை செய்து நாலு காசு பார்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. ஆனால் ஒரு பிச்சைக்காரரிடம் இவ்வளவு பணம் இருந்ததை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top