திருட்டுபயலே முதல் பாகம் ரசிகர்களுக்கு இடையே எந்த அளவுக்கு எதிர்பாரப்பு இருந்ததோ அதே அளவுக்கு குறையாத எதிர்பார்ப்பு திருட்டுபயலே 2 விற்கு இருக்கிறது  கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் 2006-ஆம் ஆண்டில் வெளியான படம் ‘திருட்டுப் பயலே’. ஜீவன் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் சோனியா அகர்வால், மாளவிகா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘திருட்டுப் பயலே-2’ படம் உருவாகியுள்ளது.முதல் பாகத்தில் நடித்த எந்த நடிகர் நடிகைகளும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோரை வைத்து எடுக்கப்பட்டுள்ள திருட்டுப்பயலே- 2 படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை சமீபத்தில் சென்னையில் உள்ள போரம் விஜயா மாலில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியானது. அதை தொடர்ந்து, இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். ‘திருட்டுப் பயலே-2’ படத்தைப் பார்த்த சென்சார் ‘U/A’ சர்டிபிக்கேட் வழங்கியிருக்கிறார்கள். ‘திருட்டுப் பயலே’ முதல் பாகத்துக்கு சென்சார் ‘A’ சர்டிபிக்கேட் தான் கொடுத்தது.