அஜித்துக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் இவருடைய தீவிர ரசிகர்கள். தற்போது படங்களை தயாரிப்பதையும் தாண்டி பல படங்களில் நடித்து வருபவர் ஆர்.கே. சுரேஷ்.

இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார். அதற்காக தன் கையில் அஜித்தின் புகைப்படத்தை டாட்டூவாக போட்டிருந்தார். தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என்றவர் அஜித். ஆனால் ஆர்.கே. சுரேஷ் எங்க குல தங்கம் அஜித் நற்பணி மன்றம் என்று எழுதப்பட்டிருக்கும் உடையை அணிந்திருக்கிறார் ஃபஸ்ட் லுக்கில்.

அதோடு இந்த படம் எல்லா தல ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் என்றும் படக்குழு கூறிவருகின்றனர்.