புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பட்ஜெட் 3 கோடி.. வசூல் 70 கோடி.. அலறவிட்ட மலையாள படம் எது தெறியுமா? மஞ்சும்மல் பாய்ஸ் இல்லங்க

எத்தனை ஜோனரில் படங்கள் வந்தாலும், சஸ்பென்ஸ், மிஸ்டரி, ஹாரர் போன்ற படங்களை தான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். ஏன் என்றால் அந்த மாதிரி படங்கள், படம் பார்க்கும் அந்த 2 மணி நேரத்தில், நமக்குள் வேறு எந்த கவலையும் சிந்தனையும் வராமல் பார்த்துக்கொள்கிறது.

அப்படி ஒவ்வொரு நொடியும், ரசிகர்களை அதிரவிடும் அளவிற்கு, நிஜ சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு மலையாள படம் உருவானது. அந்த படத்தின் பட்ஜெட் என்னவோ, வெறும் 3 கோடி தான். ஆனால் box office ஹிட் ஆக அந்த படம் அமைந்தது. கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வரை அந்த படம் வசூல் வேட்டை நடத்தியது. மேலும் OTT-யில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

மக்களை அலறவிட்ட அந்த மலையாள படம் எது தெரியுமா?

நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு, ஹாரர் காமெடி படமாக இந்த படம் உருவானது. இந்த படம் ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். இந்த படத்தில் சௌபின் சாஹிர், அர்ஜுன் அசோகன், சஜின் கூப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாம் அனைவரும் சின்ன வயதில் விளையாட ஆசை படும் ஒரு கேம் வைத்து தான் இந்த படத்தின் கதை அமைகிறது

பெங்களுருவில் ஒரு வாடகை வீட்டில் வாசிக்க கூடிய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒயிஜா போர்டு கேம் விளையாடுகிறார்கள். அதன் பிறகு அந்த வீட்டில் ஒரு சில மாற்றங்கள் நடைபெறுகிறது. அதை நுணுக்கமாக அதே நேரத்தில், ரசித்து சிரிக்கும் படியாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பெயர் ரோமாஞ்சம். IMDB-யில் இந்த 7.5 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் உள்ளது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரிப்பீட் வால்யூ உள்ள ஒரு படமாக உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது. வித்த்யாசமான் படங்கள் பார்க்க விரும்புபவர்கள்,
நிச்சயம் இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க

- Advertisement -

Trending News