Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொது நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனாவை இழுத்து கிஸ் அடித்த ரசிகர்.. தலக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் மீது உள்ள காதலினால் ரசிகர்கள் புரியாத மொழி படங்களை கூட தேடித்தேடி பார்த்து வருகின்றனர்.
ரஷ்மிகா மந்தனா ஏற்கனவே நடிகர் ஒருவரின் மீது காதல் வயப்பட்டு பின்னர் பிரேக் கப் செய்துகொண்டார். தெலுங்கில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வரும் ரஷ்மிகா முன்னணி நடிகர்கள் அனைவருடனும் தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார். இது அங்குள்ள நடிகைகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் கார்த்தி ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்மிகாவின் முதல் தமிழ் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றபோது பாடிகார்ட் போல ரசிகர் ஒருவர் நடித்து ரஷ்மிகா மந்தனாவை இழுத்து கிஸ் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதேபோல்தான் பாலிவுட் நடிகைகளிடமும் அவ்வப்போது ரசிகர்கள் அத்துமீறும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
