Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பட வாய்ப்பை தட்டித் தூக்கினாரா சீரியல் நாயகி? இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!
வர வர சினிமா நடிகைகளுக்கு இருக்கும் மவுசை விட சீரியல் நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பும் ஆரவாரமும் தாங்க முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகளை விட சீரியல் நடிகைகளின் அட்டகாசங்கள் அதிகமாக உள்ளது. கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
ரசிகர்களும் கண்ணே மணியே என சமூக வலைதளங்களில் கொஞ்சுவதால் அவர்களுக்கு இன்னும் மவுசு கூட ஆடைகளும் குறைந்து வருகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என ரசிகர்களும் கொண்டாட்டமாக தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் VJ சித்ரா. தொகுப்பாளராக இருந்தபோது கூட இவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இல்லை.
இந்த சீரியலில் நடித்த பிறகு ஓரளவு கணிசமான ரசிகர் வரவேற்பை பெற்ற சித்ரா சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் போடுவதன் மூலம் பல ரசிகர்களை சேர்த்துவிட்டார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் நேர் உரையாடலில் இருந்த விஜே சித்ராவை, உங்களுடைய உயரத்திற்கு தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட சித்ரா, என்னமோ விஜய் பட வாய்ப்பு கிடைத்த மாதிரி சந்தோஷப்பட்டுள்ளார்.

vj-chitra-fan-comment
