விஜய் டிவிக்கு பெரிய கும்பிடு போட்ட குடும்ப குத்துவிளக்கு.. வாங்குன அடி அப்படி

Vijay TV Serial Heroines: விஜய் டிவியை பொறுத்த வரைக்கும், அதில் பங்கேற்கும் கலைஞர்கள் மக்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தலையில் வைத்து கொண்டாடப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த சேனல் அந்த முகங்களை அடிக்கடி காட்டி அவர்களை வெறுக்க வைக்கவும் செய்துவிடும். அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட சீரியல் ஹீரோயின் ஒருவர், அடுத்தடுத்து வாங்கிய அடியால் சேனலுக்கு கும்பிடு போட்டுவிட்டு போயிருக்கிறார்.

மற்ற சீரியல்களின் கதாநாயகிகளை ஒப்பிடும் பொழுது விஜய் டிவி சீரியலின் ஹீரோயின்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி சீரியல் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் தான் சுஜிதா. மக்களுக்கு அவரை அதிகம் பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தது தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த மருமகளாக தனம் என்னும் கேரக்டரில் இவர் நடிக்க ஆரம்பித்தபோது இவருக்காகவே அந்த நாடகத்தை பார்த்த ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த கூட்டுக் குடும்பம், தியாகம் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் ரசிக்கும்படி அமைந்தது. அதன் பின்னர் இந்த சீரியலின் ஒவ்வொரு காட்சிகளும் ரொம்பவும் கிரிஞ்சாக இருந்தது.

Also Read:சர்க்கரை பொங்கலுக்கு வடகறியா.? முல்லையின் அக்கா மகனுக்கு ஜோடியான மீனா

தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது, எல்லோருக்காகவும் விட்டுக் கொடுப்பது என அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்தார்கள். அதிலும் சீரியலின் இறுதி கட்டத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது, வீட்டிற்கு தெரியாமல் டிரீட்மென்ட் எடுத்தது போன்ற காட்சிகளால் சுஜிதா சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

ஒரு வழியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்து இரண்டாம் பாகம் ஆரம்பித்த பொழுது சுஜிதா அந்த சீரியலில் நடிக்க மறுத்துவிட்டார். இதற்கு முக்கிய காரணம் முதல் சீசனில் அவர் அதிகமாக கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தான். சில மாதங்களுக்கு முன்பு ஜெமினி டிவியில் கீதாஞ்சலி என்னும் சீரியலில் அவர் கமிட் ஆனார். தற்போது அந்த சீரியலில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சுஜிதா மீண்டும் இந்த சீரியலில் நடித்திருந்தாலும், அதே போன்று தான் ட்ரோல் செய்யப்பட்டு இருப்பார். அவர் எஸ்கேப் ஆனது ஒரு விதத்துக்கு நல்லது தான். இந்த விஷயம் எதுவும் தெரியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் மீனா கேரக்டரில் நடித்த ஹேமா இரண்டாம் சீசனில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த சீசனில் முதலில் பிரசாந்த் கேரக்டரில் நடித்தவருக்கு ஹேமா இதில் ஜோடியாக நடிப்பது நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Also Read:சும்மாவே விக்ரம் காலில் சலங்கை கட்டுன மாதிரி ஆடுவாரு.. இதுல இனியா தோஸ்த் வேற

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்