மீ டூ புகாரில் சிக்கிய மலையாள க்ரஷ் நடிகர்.. ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய ஆணழகன் யார் தெரியுமா?

Mollywood Me Too: பொதுவாகவே மலையாள நடிகர்கள் மீது பெண் ரசிகைகளுக்கு கிரஷ் அதிகமாக இருக்கும். அப்படி தமிழ்நாட்டில் உள்ள பெண் ரசிகைகள் அதிகம் கொண்டாடும் மலையாள நடிகர் ஒருவர் மீ டூ புகாரில் சிக்கி இருக்கிறார்.

மலையாள சினிமா உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் அடை மழை போல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது மீ டூ புகார்கள். நாம் எதிர்பார்க்காத பலரும் இதில் சிக்கி இருக்கிறார்கள். நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை என்பதை தாண்டி, சினிமாவில் வாய்ப்புக்காக வரும் பெண்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

மீ டூ புகாரில் சிக்கிய மலையாள க்ரஷ் நடிகர்

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நிறைய பெண்கள் இது குறித்து புகார் அளித்து வருகிறார்கள். பிரபல மலையாள ஹீரோ ஒருவர் இந்த பிரச்சனையில் தற்போது சிக்கி இருக்கிறார். நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான் நிவின் பாலி.

பிரேமம் படம் இவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. கருப்பு சட்டை வெள்ளை வேஷ்டி என்றாலே நிவின் பாலியல் ரசிகர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இருந்தது.

தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்த நிவின் பாலி சில மாதங்களுக்கு முன் அவருடைய அதீத உடல் எடையினால் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார். இருந்தாலும் அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் இன்று வரை மலையாள சினிமா உலகை ஆட்சி செய்து வருகிறார்.

பெண் ஒருவர் நிவின்பாலி தனக்கு வெளிநாட்டில் வைத்து தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருக்கிறார். படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி தன்னிடம் அத்து மீறியதாக அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரில் ஏ1 குற்றவாளியாக நடிகர் சித்திக் சிக்கி இருக்கும் நிலையில், நிவின் பாலி ஏ6 குற்றவாளி ஆவார். இந்த நிலையில் இந்த புகார் குறித்து நிவின் பாலி என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும், இதை ஆதாரத்துடன் நிரூபிக்க தான் எந்த எல்லைக்கும் செல்ல இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

Next Story

- Advertisement -