புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவா-கீர்த்திக்கு நடுவே ஓடிய லவ் டிராக், வாலை ஒட்ட நறுக்கிய சம்பம்.. இது என்ன புது கதையா இருக்கு?

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தான் இசையமைப்பாளர் இமான் தன் முன்னாள் மனைவியை பிரிவதற்கு காரணம் என ஏற்கனவே ஒரு சர்ச்சை கிளம்பியது. இதற்கிடையில் தன்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் கூட லவ் ட்ராக் ஒன்று ஓடியதாக புது கதை கிளம்பி இருக்கிறது.

அது எப்படி சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடியே தான் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதே, அப்புறம் எப்படி லவ் என எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது. கல்யாணத்துக்கு பிறகு தான் இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார் சிவா என பத்திரிக்கையாளர் சவிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

சிவா-கீர்த்திக்கு நடுவே ஓடிய லவ் டிராக்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக ரஜினி முருகன் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த ஜோடி பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. அதுவும் உன் மேல ஒரு கண்ணு பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இருவரும் ரெமோ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தில் இரண்டு பேருக்கும் நடுவில் கெமிஸ்ட்ரி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதற்கு காரணம் நிஜ வாழ்க்கையிலும் இருவருக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் ஒர்க்அவுட் ஆகிவிட்டதாம்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் மாட்டிக் கொண்டு போனால் சினிமாவில் நாம் நினைத்ததை ஜெயிக்க முடியாது என சிவகார்த்திகேயன் பயந்து இருக்கிறார். இதனால் இந்த லவ்வை அப்படியே கழட்டி விட்டு, மொத்த வாலையும் நறுக்கிக் கொண்டு அமைதியாகி விட்டாராம். அதன் பிறகு கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

- Advertisement -

Trending News