புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தளபதி சும்மா கூப்பிட்டா கூட எனக்கு ஓகே தான்.. நம்பர் நடிகையின் முடிவால் வெளிவந்த சீக்ரட்

Thalapathy Vijay: ஒல வாயை மூடினாலும் ஊர் வாய மூட முடியாது என ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது இந்த நம்பர் நடிகைக்கு தான் சரியாக இருக்கும். பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் இந்த நம்பர் நடிகை ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். இதனால் நடிகர் விஜய் பெயர் டேமேஜ் ஆகிவிடும் போலிருக்கிறது.

நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையை பொருத்தவரைக்கும் அவருடைய படங்கள் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்படும். அதை தவிர்த்து நடிகைகளுடன் எந்த ஒரு வதந்தியும் வந்தது கிடையாது. விஜய் பற்றிய வதந்திகளை தேடி பார்த்தால் அதில் சிக்குவது த்ரிஷாவாகத்தான் இருக்கும்.

தளபதி விஜய் மற்றும் திரிஷா பற்றிய வதந்திகள் ஒரு காலகட்டத்தில் நிறையவே வெளிவந்தன. பின்னர் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றவே இல்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் இணைந்தார்கள். அதன் பின்னர் விஜய் வீட்டில் விவாகரத்து ஆகிவிட்டது என பேசும் அளவுக்கு சர்ச்சை கிளம்பியது.

திரிஷாவை பொறுத்தவரைக்கும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மார்க்கெட் இல்லாமல் இருந்த நடிகை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தான் மீண்டும் ஃபார்முக்கு வந்தார். சமந்தா, நயன்தாரா போன்றவர்கள் கூட மார்க்கெட் இல்லாத போது ஐட்டம் டான்ஸ்க்கு ஆடி இருக்கிறார்கள்.

திரிஷா எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எந்த படத்திலும் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடியது இல்லை. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்தது. த்ரிஷா நினைத்திருந்தால் அப்படியே பாலிவுட் பக்கம் போகலாம் என்ற ஆசையில் சரி என்று சொல்லி இருக்கலாம்.

சும்மா கூப்பிட்டா கூட எனக்கு ஓகே தான்

எந்த ஒரு காரணத்திற்காகவும் த்ரிஷா தன்னுடைய கொள்கையை தளர்த்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட த்ரிஷாவை கேட்டு இருக்கிறார்கள். தளபதி விஜய் படம்னா சம்பளம் இல்லாமல் கூட ஆடுகிறேன் என ஓகே சொல்லி இருக்கிறார் திரிஷா.

வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்த போது கூட தன்னுடைய கொள்கையை தளர்த்தாமல் இருந்தார் திரிஷா. ஆனால் நடிகர் விஜய் படத்திற்காக இப்போது இப்படி இறங்கி வந்திருக்கிறார். ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா விஷயத்தில் ஏகத்துக்கும் நிறைய விஷயங்கள் பேசப்படும். இப்போது இதெல்லாம் உண்மைதான் என அடித்து சொல்லும் அளவுக்கு திரிஷா இந்த வேலையை பார்த்திருக்கிறார்.

Trending News