அஜித்துக்கு தல, அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் கொடுத்த பட்டங்கள் ஏற்கனவே இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் கூட ஆஸ்திரிய பத்திரிக்கையாளர்கள் அவருக்கு விவேகம் படம் ஷூட்டிங் நடந்தபோது இந்தியாவின் சில்வர் ஸ்டர் ஸ்டாலோன் என பெரிய பட்டத்தை கொடுத்தார்கள்.

இயக்குனர் லிங்குசாமி முன்னணி ஹீரோக்கள் பலரையும் வைத்து படம் கொடுத்தவர். இவர் அஜித் திரிஷாவை வைத்து ஜி படத்தை கடந்த 2005 இல் வெளியிட்டார்.

அஜித் பற்றி அவர் பேசிய போது, அஜித் தான் படத்தில் கமிட்டாகிவிட்டால் முடித்துகொடுத்தான் போவார். ஷூட்டிங்கில் இயக்குனர்கள் சொல்வதை அப்படியே கேட்பார். போதும் நன்றாக இருக்கிறது என சொல்லும் வரை எத்தனை டேக் கேட்டாலும் கொடுப்பார்.

யாரையும் பின்பற்றமாட்டார். அவருக்கு உரிய ஸ்டைலில் தான் நடிப்பார். நேரம் காலத்தை மட்டுமே நம்பி உழைக்ககூடியவர். எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பின்னால் ஜைஜாண்டிக்காக நடிக்கக்கூடியவர்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் அவர் மட்டுமே என பெரிய டைட்டில் கொடுத்தார். டாம் க்ரூஸ் மிக பிரபலமான ஹாலிவுட் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.