அஜித்துன்னா கசக்குது, சூர்யான்னா இனிக்குதா?. சுயநலமான உலகம் டா சாமி

Ajith – Surya: வளர்த்த கிடா மார்பில் பாயும் என ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு தான் சரியாக பொருந்தும். என்னதான் முகத்திற்கு முன்னால் நன்றாக பழகினாலும், அவர்களுடைய சொந்த விஷயம் என வந்து விட்டாள் நேக்காக கழண்டு விடுவார்கள். அப்படித்தான் நன்றாக பழகிய ஒருவரால் நடிகர் அஜித்குமாருக்கு கசப்பான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரைக்கும் எந்த அளவுக்கு அமைதியாக இருக்கிறாரோ அதை விட பல மடங்கு ஒருவரை நம்பி விட்டால் அவருக்காக எல்லாவற்றையும் செய்யக் கூடியவர். இயக்குனர் எச் வினோத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கையால் தான் தொடர்ந்து அவருடன் மூன்று படங்கள் பண்ணியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அப்படித்தான் ஒரு மிகப்பெரிய பிரபலத்தையும் அவர் அதிகமாக நம்பியது.

பாலிவுட்டில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர்தான் போனி கபூர். இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்று தான் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையம் இல்லாத போனி கபூரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தது நடிகர் அஜித்குமார் தான். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் பொழுது அஜித்துடன் பணியாற்ற விரும்பினார் என பல மேடைகளில் போனிகாபூர் சொல்லியது எல்லோருக்குமே நினைவிருக்கும்.

Also Read:அஜித்தை வளைக்க முயற்சி செய்யும் பிஜேபியின் கருப்பு ஆடு.. விஜய்யின் அரசியல் நகர்வால் போடப்படும் புது பிளான்

இதனால்தான் நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து ஒன்று இரண்டு படங்களில் பணியாற்றினார். அதே சமயத்தில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகள் ஜான்விகபூரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தவும் விரும்பினார். அஜித்துக்கு ஜோடியாக ஜான்வியை நடிக்க வைக்க நிறைய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுயநலமான உலகம்

ஆனால் நடிகர் அஜித்குமார் ஜான்வியை விட அதிக வயது வித்தியாசம் உள்ளவர். அவருடன் இணைந்து நடித்தால் அடுத்தடுத்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஜான்விக்கு கிடைக்காது என போனி கபூர் கணித்திருக்கிறார். இதனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை அவர் மறுத்தும் விட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் ஜான்வி உடன் நடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அந்தத் திட்டத்திற்கும் போனி கபூர் ஒத்துவரவில்லை.

தற்போது நடிகர் சூர்யா பாலிவுட்டில் கர்ணன் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருப்பது அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாகி இருக்கிறது. தனக்கு தமிழ் சினிமாவில் வாழ்க்கை கொடுத்த அஜித்துடன் தன் மகளை நடிக்க வைக்க விருப்பம் இல்லாத போனி கபூர், தற்போது சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தால் ஜான்வியின் மார்க்கெட் உச்சத்திற்கு போய்விடும் என முடிவெடுத்து இருப்பது அவருடைய சுயநலத்தை தான் காட்டுகிறது.

Also Read:லவ் பண்ணிட்டு 4 ஹீரோக்களை கழட்டி விட்ட திரிஷா.. மிளகாய் பொடி மாமிக்கு ஆப்பு அடிச்ச அஜித்

- Advertisement -spot_img

Trending News