நந்துவாக நடித்தது கமல் இல்லையா.? அடப்பாவிங்களா, வெளியே சொல்லாமலே மறச்சுட்டீங்களே!

Aalavandhan Movie: பொதுவாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் பெரிய அளவில் பேசப்படும் பொழுது, அந்த படத்திற்காக பங்களிப்பு அளித்த எல்லா கலைஞர்களின் பெயர்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும். அப்படி உலகநாயகன் கமலஹாசன் ஆளவந்தான் படத்தில் செய்ய தவறிய விஷயம் ஒன்று, பிரபல நடிகரின் மூலமாக வெளியில் வந்திருக்கிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு ரிலீசான ஆளவந்தான் படத்தை கமலஹாசனின் கனவு படம் என்று சொல்லலாம். 1980 ஆம் ஆண்டு தாயம் என்னும் பெயரில் இந்த படத்தின் கதையை கமல் அவருடைய குருவான கே பாலச்சந்தரிடம் சொல்லி இருந்தார். ஆனால் இது போன்ற ஒரு கதையை எடுக்க இது சரியான நேரம் இல்லை என்று இந்த கதையை கைவிட்டு விட்டார்கள்.

அதன் பின்னர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த படத்தை இயக்கினார். கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்தில் கமல் விஜயகுமார் மற்றும் நந்தகுமார் என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். பெரும்பாலும் நடிகர்கள் டபுள் ஆக்சனில் நடித்தால் சில காட்சிகளுக்கு டூப் நடிகர்கள் நடிப்பது வழக்கம்.

Also Read:உலக நாயகனிடம் காதலால் மயங்கி கிடந்த 6 நடிகைகள்.. மரணப்படுக்கையில் பார்க்க துடித்த ஹீரோயின்

ஆனால் இந்த நந்தகுமார் கதாபாத்திரத்திற்கு முழுக்க முழுக்க மற்றொரு பிரபல நடிகர் தான் டூப் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வில்லன் மற்றும் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து பிரபலமடைந்த ரியாஸ் கான் தான் அந்த நடிகர். இவர் வின்னர் படத்தில் கட்டதுரை என்னும் கேரக்டரில் நடித்திருப்பார் ஆளவந்தான் படத்திலேயே நந்தகுமார் உடன் இருக்கும் சுல்தான் கேரக்டரில் இவர் நடித்திருப்பார்.

கமலுக்கு டூப் போட்ட நடிகர்

சமீபத்தில் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை ஒட்டி ரியாஸ் கானின் மனைவி, உமாரியாஸ் இந்த விஷயத்தை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆளவந்தான் படத்தில் நந்தகுமாரன் கேரக்டருக்கு பாடி டபுள் பண்ணியது ரியாஸ்கான் என்றும், ஆனால் அந்த விஷயத்தை பட குழு பெரிய அளவில் வெளியில் சொல்லவில்லை எனவும் தெரிகிறது.

ஆளவந்தான் படத்திற்காக கமலஹாசன் கிட்டத்தட்ட 10 கிலோ ஏற்றியதாக சொல்வார்கள். இதில் நந்தகுமார் கேரக்டருக்கு பெரும்பாலும் ரியாஸ் தான் நடித்ததற்கு காரணமே அவருடைய உடல் அமைப்பு தான். சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கும் கமல் இது போன்ற ஒரு நடிகரை பாராட்ட தவறியது ரொம்பவும் தவறான விஷயம்தான்.

Also Read:நடிப்பில் கமலையே மிரள விட்ட 4 நடிகைகள்.. ஒரு படத்துக்கே உயிர் கொடுத்த அன்னலட்சுமி

- Advertisement -spot_img

Trending News