வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இப்படி ஒரு இண்ட்ரோவை சினிமால கூட பாத்ததில்லை.. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல 90ஸ் ஹீரோயின்

Nenjathai Killathe: ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் ஆன நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலில் பிரபல 90 நடிகை என்ட்ரி கொடுத்திருக்கிறார். ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஜெய் ஆகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

45 வயதாகும் ஹீரோ, 35 வயதாகும் ஹீரோயின் குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். திடீரென சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபல 90ஸ் ஹீரோயின்

அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. இந்த சீரியலை பார்ப்பவர்களுக்கு இதன் கதை என்னவென்று தெரியும். 90 கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியலான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் தமிழ் ரீமேக் தான் இது.

இதில் நேற்று வெளியான ப்ரோமோவில் மதுமிதாவின் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாட ரெடியா இருக்கிறார்கள். அப்போது மதுமிதாவுக்கு ரொம்ப புடிச்ச கிப்ட் என்று ஒரு போட்டோ பிரேமை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதில் கௌதமியின் புகைப்படம் இருக்கிறது.

இதைவிட சிறந்த பரிசை மதுமிதாவுக்கு யாராலும் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். அப்போது ஜெய் ஆகாஷ் என்னால் கொடுக்க முடியும் என்று சொல்கிறார். மதுமிதாவிடம் இது உனக்கான கிப்ட் நீயே போய் ரிசீவ் பண்ணிக்கோ என்று சொல்கிறார்.

கதவை திறந்த மதுமிதாவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே பவுன்சர்களுடன் கௌதமி நிற்கிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது கௌதமி இந்த சீரியலில் ஒரு பெரிய பணக்கார பெண்ணாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

90களில் காலகட்டத்தில் எல்லா டாப் ஹீரோக்களோடும் ஜோடி சேர்ந்தவர் கௌதமி. சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் கால் பதித்திருக்கிறார். கௌதமி உள்ளே வந்த பிறகு நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

nenjathai killathe
nenjathai killathe
- Advertisement -

Trending News