செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் தண்டிக்கும் குடும்பம்.. கொலைகாரன் கூட வாழ முடியாதுன்னு ராதிகா எடுத்த முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார் என்று தெரிந்ததும் ராதிகாவை விட ஓவராக அக்கறை இருக்கிற மாதிரி நடந்து கொள்வது ராதிகாவின் அம்மா கமலா தான். அதற்கு என்ன காரணம் என்றால் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று கோபி நினைத்ததற்காக சப்போர்ட் பண்ணும் விதமாகத்தான் ராதிகாவின் அம்மா நடந்து கொள்கிறார்.

அத்துடன் கோபியை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என்று ராதிகாவின் அம்மா முயற்சி எடுக்கிறார். ஆனால் என்ன நடந்தாலும் நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் மிதிக்க மாட்டேன் என்று ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். அப்பொழுது மாப்பிள்ளை மீது உனக்கு அக்கறையே இல்லையா? ஏன் இப்படி இருக்கிறாய் என்று கமலா கேட்கிறார்.

அதற்கு ராதிகா அவர் என்ன நல்லது செஞ்சுட்டா ஜெயிலுக்கு போயிருக்கிறார். இதே மாதிரி நீ ஒரு ஹோட்டல் நடத்தும் பொழுது யாராவது இப்படி பண்ணி இருந்தால் சும்மா விட்டு இருப்பியா? இல்லை என்றால் அவர் நடத்தும் ஹோட்டலில் இந்த மாதிரி ஒரு பிரச்சனை நடந்திருந்தால் அவர்தான் சும்மா பார்த்திருப்பாரா?? அதை தானே பாக்கியாவும் செய்து இருக்கிறார்.

உண்மையிலேயே எங்களை பற்றி நினைப்பு இருந்தால் கோபி இந்த அளவுக்கு ஒரு கொலைகாரனாக மாறி இருக்க மாட்டார். முதல்ல கட்டிட்டு வந்தவர் குடிகாரனாக இருந்தார், இப்பொழுது இவர் கொலைகாரனாக இருக்கிறார். கொலைகாரனுடன் நான் எப்படி வாழ முடியும், உன்னை மாதிரி நானும் பேசாமல் தனியாகவே மயூவை பார்த்து வளர்த்திருக்கலாம்.

தேவை இல்லாமல் கோபியை நம்பியதால் இப்பொழுது நான் தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று ராதிகா புலம்புகிறார். அடுத்ததாக பாக்யா இந்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று ஈஸ்வரி மற்றும் செழியன் குடைச்சல் கொடுக்கிறார்கள். ஆனால் பாக்கியா, யார் என்ன சொன்னாலும் நான் கொடுத்த கேசை திருப்பி வாங்க மாட்டேன். அவர் எத்தனையோ டார்ச்சர்கள் எனக்கு கொடுத்திருந்தாலும் அப்போதெல்லாம் அமைதியாக தான் இருந்தேன்.

ஆனால் எப்பொழுது உணவில் கலப்படத்தை கலந்து அதன் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அப்பொழுது அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டேன் என பாக்கியா கூறுகிறார். இதைக் கேட்டதும் நீ ரொம்ப ஓவரா தான் பண்ணுகிறாய் என்று செழியன், பாக்கியவிடம் சொல்லி போய் விடுகிறார். எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டேன் என்பதற்கு ஈஸ்வரியும் இந்த விஷயத்தில் கோபிக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

அடுத்ததாக எழில், தயாரிப்பாளரை பார்த்து எனக்கு இந்த சான்ஸ் வேண்டாம் என்று சொல்லிட்டு வருகிறேன் என பாக்யாவிடம் சொல்கிறார். அதற்கு பாக்கியா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஒரு அப்பாவாக அவர் இதுவரை எந்த ஒரு ஸ்தானத்திலும் இருந்து நல்ல விஷயத்தை பண்ணவில்லை. அதனால் இது அவர் செய்ய வேண்டிய கடமை தான். இதை நினைத்து நீ கவலைப்படாதே என்று எழிலை சமாதானப்படுத்துகிறார்.

ஆனாலும் பாக்யாவை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரி, செழியன், இனியா என அனைவரும் சேர்ந்து கோபமாக பேசி கஷ்டப்படுத்தி வருகிறார்கள். அடுத்ததாக ஸ்டேஷனில் இருக்கும் கோபி நான் எந்த தவறும் இல்லை என்று வாதாடுகிறார். அப்பொழுது அங்கே வந்த ஆனந்த் நடந்த எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். பிறகு கோபியை பார்த்து பேசுவதற்காக கோபி நண்பர் வருகிறார். அவரிடம் எப்படியாவது என்னை இப்பொழுதே ஜாமினில் வெளியே எடுத்து விடு என்று சொல்கிறார்.

அந்த வகையில் கோபி நண்பர் மூலம் கோபி ஜாமின் கிடைத்து வெளியே வந்து விடுவார் போல. இருந்தாலும் இனி தான் கோபிக்கு மிகப்பெரிய தண்டனை இருக்கிறது என்பதற்கு ஏற்ப ராதிகா மற்றும் மயூ இருவரும் சேர்ந்து கோபி வேண்டாம் என்று ஒதுக்க போகிறார்கள். ஆனாலும் இப்பொழுது கூட திருந்தாமல் இந்த கோபி, பாக்யா மீது தான் வெறிகொண்டு கோபத்தில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News