Thalapathy Vijay: தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி படத்தின் அறிவிப்பும் வெளியாகிவிட்டது. மக்களை நம்பி மக்களுக்காக அரசியலில் இறங்குகிறேன் என அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார். நடிகர் விஜய்யை அடுத்து ஒரு அரசியல்வாதியாக முதல் மேடையில் பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
எச் வினோத் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 69 வது படத்தில் நடிக்க இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் இதுதான் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என்பது அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் பெரிய கவலை தான்.
அவருடைய ஸ்டைல், அவர் நடனமாடும் அழகு, 50 வயதிலும் இளமையாக இருக்கும் ஹீரோ என சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஹீரோ. உண்மையை சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் பொருளாதாரம் என்பது தற்போதைக்கு விஜய் படங்களை நம்பி தான் இருக்கிறது.
விஜய்யின் சினிமா வியூகம்
விஜய் யாருடன் போட்டி போடுகிறார், அடுத்த விஜய் யார் என்பதுதான் இப்போதைய போட்டியே. அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகுவது என்பது தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கூட பெரிய அதிர்ச்சி தான்.
தமிழக மக்களை நம்பி களம் இறங்கும் விஜய்யை மக்கள் காப்பாற்றுவார்களா என்பது தான் இப்போதைக்கு அவருடைய ரசிகர்களின் பெரிய கவலை. மக்களுக்காக சேவை செய்வதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் ஒரு மனதாக முடிவு எடுத்துவிட்டார்.
விஜய் நடத்த இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் வலைப்பேச்சு சேனலை சேர்ந்த அந்தணன் விஜய்யின் சினிமா வியூகம் பற்றி புதிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் விஜய்க்கு சினிமாவில் எண்டு கார்டு என்பது இல்லை. விஜய் கண்டிப்பாக சினிமாவுக்கு திரும்பி வருவார். 2026 தேர்தல் அவருக்கு கை கொடுக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்த தேர்தல் 2031 ஆம் ஆண்டில் தான் இருக்கும்.
அந்த ஐந்து வருடங்களுக்கு விஜய் அரசியல்வாதியாக என்ன செய்வார். பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் போல தினமும் ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுக் கொண்டா இருப்பார். 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு விஜய் கண்டிப்பாக சினிமாவுக்கு திரும்பி விடுவார் என அந்தணன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
புதுப்பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகும் கோட்
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- GOAT Box Office – 16வது நாள் முடிவில் ‘தி கோட்’ வசூல் ரிப்போர்ட்
- GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை, வெங்கட் பிரபு பேட்டி