Tamil Cinema News | சினிமா செய்திகள்
13 வருடத்திற்கு முன் சூப்பர் ஸ்டாருக்கு எழுதிய கதையில் நடித்த தல அஜித்.. உண்மையை சொன்ன இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித். இருவருக்குமே ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உண்டு. கடந்த வருட தொடக்கத்தில் தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
ஆனால் 13 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக எழுதப்பட்ட கதையில் தல அஜித் நடித்த விஷயம் தற்போது அந்த படத்தின் இயக்குனரால் வெளிவந்துள்ளது. தல அஜித் கடந்த 2006ம் ஆண்டு மூன்று வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் வரலாறு.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் ஆகியோரின் ஆஸ்தான இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் எழுதி இயக்கியிருந்தார். மூன்று வேடத்தில் தல அஜித் நடித்திருந்த வரலாறு படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடம் பிடித்தது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கே எஸ் ரவிக்குமார் வரலாறு படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எழுதிய கதை என விவரித்துள்ளார். மேலும் வரலாறு படத்தின் கதையை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்ததாகவும், ஆனால் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் பேசிய ஆனதால் இந்த கதையில் அஜீத் நடிக்க நேரிட்டது எனவும் கூறியுள்ளார்.
படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அந்த கதையில் நான் தானே நடிக்கிறேன் என்று சொன்னேன் என ரஜினி செல்லமாக கோபப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தல அஜித் கேரியரில் வரலாறு படம் மிக முக்கிய ஒன்றாக அமைந்தது. அதில் பரதநாட்டிய கலைஞராக நடித்து அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.
