India | இந்தியா
8 வயதில் YouTube மூலம் 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்.. எப்படி தெரியுமா?
தற்போது அதிகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் யூடியூப் முதலிடம் வகிக்கிறது. இதன் பயனாளர்களைப் பொறுத்து பெரிய அளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. தற்போது யூடியூப், வேலையில்லா இளைஞர்களையும் புதிது புதிதாக யோசிக்க வைத்து முதலாளி ஆக்கிவிடுகிறது.
இதனால் பலர் சொந்தமாக யோசிக்க ஆரம்பித்து போதுமான அளவு வருமானங்களை ஈட்டி வருகின்றன. அந்தவகையில் போர்ப்ஸ் நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவு சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும்.
அந்த வகையில் இந்தியாவில் முதலிடம் பிடித்தவர் விராட் கோலி. அதேபோல் யூடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டுவார்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரியான் யுவன் வருடத்திற்கு 185 கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.
புதிய புதிய விளையாட்டு பொருட்களை எப்படி உபயோகப்படுத்துவது மற்றும் பயன்படுத்துவது போன்ற செய்முறை வீடியோக்களை வெளியிடுவது இந்த சிறுவனின் வேலை. ரியான்ஸ் வேர்ல்டு என்ற பெயரில் உள்ளே இந்த யூடியூப் சேனலுக்கு 2 கோடிக்கும் மேல் subscriber’s உள்ளனர்.
சராசரியாக இந்த சிறுவனின் வீடியோவை ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு லட்சம் பேர் பார்த்து விடுகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல் நான்கே வருடங்களில் நம்பர் ஒன் யூடியூப் சேனல் ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
