புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீனாவை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் டிராமா.. ரோகிணி கொடுத்த ஐடியா, கெஞ்சி பார்க்கும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், இது எனக்கான நேரம் என்று விஜயா ரொம்பவே ஓவராக ஆடுகிறார். விஜயா, மீனா வீட்டிற்கு சென்று சத்யாவை அடித்தது மட்டுமில்லாமல் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார். போதாதற்கு மீனாவையும் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் முத்து எப்படியாவது அம்மாவை சமாதானப்படுத்தி சத்யா மீது போலீஸ் கேஸ் கொடுக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மீனாவை கூட்டிட்டு வீட்டுக்கு போகிறார்.

அங்கே மீனாவை பார்த்ததும் விஜயா வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் பேசி மீனா மற்றும் மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார். சும்மாவே விஜயாவுக்கு மீனா மற்றும் மீனாவின் குடும்பம் என்றால் பிடிக்கவே செய்யாது. அப்படிப்பட்ட விஜயாவுக்கு தற்போது தொக்காக ஒரு விஷயம் மாட்டி இருக்கிறது என்றால் அல்வா சாப்பிடுவது போல் என்று மீனாவை திருட்டு குடும்பத்தை சேர்ந்தவள் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.

இப்படி விஜயா, மீனாவை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவதை மொத்த குடும்பமும் இருந்து வேடிக்கை பார்க்கிறது. அதில் அண்ணாமலையும் ஒருவராக, மீனாவுக்கும் குடும்பத்துக்கும் சப்போர்ட் பண்ணாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய அப்பா நியாயமான ஒரு முடிவு எடுப்பார் என்று முத்து, அண்ணாமலையிடம் போய் கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை, சத்யா செய்தது தவறு அதற்கு ஏற்ற வீடியோ இருக்கிறது. தவறு செய்தவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அந்த நேரத்தில் போலீஸ் வந்து கேசை வாபஸ் வாங்க போகிறீர்களா என்று விஜயாவிடம் கையெழுத்து கேட்டு வந்திருக்கிறார்கள். உடனே விஜயா நான் இதற்கு கையெழுத்து போட வேண்டும் நான் அவன் மீது கேஸ் கொடுக்கிறேன்.

அவனைத் தூக்கி ஜெயிலுக்குள் போடுங்க, அது மட்டும் இல்ல மொத்த குடும்பமும் திருட்டு கும்பல் தான் அவர்களையும் விசாரிங்க என்று போலீஸிடம் பத்த வைத்து கையெழுத்தை போட்டு விட்டார். கையெழுத்து போட வேண்டாம் என்று மீனா மற்றும் முத்து எவ்வளவு தடுத்தாலும் விஜயா கேட்காமல் ஆணவத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.

அந்த வகையில் சத்யாவை போலீஸ் தேடி ஜெயிலுக்கு கூட்டிட்டு போகப் போகிறார்கள். இதோடு நிறுத்தாமல் மீனாவையும் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று விஜயா, மீனாவை வெளியே போக சொல்கிறார். ஆனால் அண்ணாமலை சத்யா செய்த தப்புக்கு தண்டனை கிடைக்கும் படி கேஸ் கொடுத்து விட்டாய். ஆனால் தவறு பண்ணாத மீனா எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதனால் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது தவறு என்று சொல்லிய நிலையில் விஜயா அப்படி என்றால் நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று ஒரு டிராமாவை போடுகிறார். ஆனாலும் அண்ணாமலை தடுக்கவில்லை. அதனால் விஜயா, பேக்கை தூக்கிட்டு தோழி பார்வதி வீட்டுக்கு போய்விட்டார். ஆனால் இவ்வளவு தூரம் நடந்தும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் சத்யாவிற்கு சப்போர்ட்டாக பேசவில்லை.

இருந்தாலும் மீனா ஒவ்வொருவரிடமும் தம்பிக்காக கெஞ்சி சப்போர்ட் பண்ண சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் யாரும் சப்போர்ட் பண்ணாமல் சத்யாவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜயாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் தம்பியையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்பதற்காக மீனா மற்றும் முத்து இருவரும் சேர்ந்து விஜயாவை பார்த்து பேச போகிறார்கள்.

அப்படி பேசும்போது விஜயாவிடம் நீங்க வீட்டுக்கு வாங்க, நாங்க வெளியே போய் விடுகிறோம். ஆனால் சத்யா மீது கொடுத்திருக்க கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லப் போகிறார்கள். உடனே ரோகினி, இதுதான் என்று சான்ஸ் என்று விஜயாவிடம் நம்மளுக்கு சத்யா எப்படி போனா என்ன. ஆனால் இந்த மீனாவும் முத்துவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பது தான் முக்கியம். அதனால் இந்த டீலுக்கு ஒத்துக்கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுக்க போகிறார். அதன்படி விஜயா கேசை வாபஸ் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பவும் போய்விடுவார்.

- Advertisement -

Trending News