புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

24 மணி நேரமும் போதை, அப்பதான் ஸ்டோரி நல்லா வருமாம்.. மேடையில் மட்டமாக பேசிய இயக்குனர்

வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் ஒருவர் 24 மணி நேரமும் குடித்துக் கொண்டே போதையிலேயே இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இந்நிலையில் இவர் மேடையில் பல நடிகர், நடிகைகளை தரக்குறைவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரபல இயக்குனராக இருந்தாலும் இவர் தப்பென்று நினைத்தாலும் உடனே கேட்டுவிடுவார். யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாத ஒருவர்.

மேலும் பிரபல நடிகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். தற்போது தன் படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றை இயக்கியுள்ளார். இது பல முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். இதனால் இப்படத்தின் ரிலீசுக்காக தற்போது இயக்குனர் காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதற்கு காரணம் குடி தானாம். ஏனென்றால் அவர் போதையில் இருந்தால் தான் வித்தியாசமாக யோசிக்க முடியும் என்பதால் இப்படி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு முடிந்த உடனே பாருக்கு சென்று விடுவாராம்.

இப்ப வரைக்கும் போதையில் தான் படங்களை இயக்கி வருகிறாராம் அந்த இயக்குனர். இதனால் அவர் படத்தில் நடிக்க தற்போது முன்னணி நடிகர்கள் தயங்குகின்றனர். இதனால் அறிமுகம் இல்லாத அல்லது புதுமுக நடிகர்களை வைத்து இயக்குனர் படத்தை எடுத்து வருவதாக தெரிகிறது.

இவர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தனது மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணமும் அந்த இயக்குனர் முழுவதும் குடி குடி என இருப்பதனால் தான் அவரைவிட்டு பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News