Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அஜித் ஓகே சொன்னால் அடுத்த நாளே ஷூட்டிங் தான்.. கதை கூட ரெடி ஆயிடுச்சு என்ற இயக்குனர்!
1996-க்கு பிறகு தளபதி விஜய் மற்றும் தல அஜித் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படி ஒன்று நடந்தால் மட்டுமே ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் அதிலும் என்னுடைய நடிகர் தான் சிறப்பாக நடித்தார் என்ற பிரச்சனை வராமல் இருந்தால் சரிதான்.
அந்த வகையில் எப்படியாவது இருவரையும் இணைத்து விட வேண்டும் என பல இயக்குனர்கள், அவர்களுக்கு நல்லதோ இல்லையோ அவர்களை வைத்து படம் இயக்கினால் அவர்களது பெயர் நிலைத்து நிற்கும் என்பதற்காகவே போட்டி போடுகின்றனர்.
இருந்தாலும் சரியான கதை அமையவில்லை. இந்நிலையில் அடிக்கடி ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆகி படம் எடுப்பவர் தான் நம்ம வெங்கட் பிரபு. ஜாலியான இயக்குனர் என்றால் அது இவர்தான்.
2010 ஆம் ஆண்டு மங்காத்தா படத்தில் தல அஜித்துடன் அர்ஜுன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை என்னிடம் கேட்டு இருக்கலாமே என விஜய் ஆதங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு எப்படியாவது தல அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கி விட வேண்டும் என பல வருடமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார் வெங்கட்பிரபு.
இப்போது இருக்கும் இயக்குனர்களில் இவருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட். ஒரு மாதிரி கதை ஒன்று உருவாகி இருக்கிறதாம். விரைவில் அதற்கான தீவிர வேலைகளில் இறங்க இருப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
