Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துக்கு காமெடி தான் செட் ஆகும்.. ஆனா விஜய்க்கு? பிரபல இயக்குனரின் சர்ச்சை கருத்து
By
தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்கால கரடுமுரடான பயணத்திற்கு பிறகு தற்போது முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இருவருமே நிறைய சோதனைகளை கடந்து தான் சினிமாவில் தடம் பதித்துள்ளனர். இவர்களின் படங்களை பார்த்து வியாபாரம் செய்த காலங்கள் முடிந்து தற்போது அவர்களது பெயரைக் கேட்டு பலகோடி வியாபாரம் செய்யும் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரின் கருத்து இருவரது ரசிகர்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர். இவரது சமீபத்திய பேட்டி ஒன்றில் தல மற்றும் தளபதி ஆகிய இருவரைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.
தொகுப்பாளர் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் தல மற்றும் தளபதி ஆகிய இருவருக்கும் எந்த மாதிரி திரைப்படங்களை இயக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்திக், தளபதியை வைத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்றும், தல அஜித்தை வைத்து காமெடி படம் இயக்க வேண்டும் என்று கூறியது அவரது ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டலான பல கதாபாத்திரங்களில் நடித்த தல அஜித்தை காமெடி படம் நடிக்க வேண்டும் என்று கூறியது மற்ற படங்களிலிருந்து தல அஜித்தை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக இருக்கலாம். தல அஜித் இந்த மாதிரி ஜாலியான படங்கள் செய்து நீண்ட நாட்கள் ஆகியதால் அவர் அப்படி யோசித்திருக்கலாம்.
இருந்தாலும் பொது மேடைகளில் முன்னணி நடிகர்களை பற்றி பேசும்போது யோசித்துப் பேசுவது நல்லது.
