புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் கதை என்னோடது.. ஆதாரத்தோடு நியாயம் கேட்கும் இயக்குனர்

RJ Balaji: ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் நாளை வெளியாக இருக்கிறது. அதன் பிரமோஷனில் அவர் பிஸியாக இருக்கும் நிலையில் சூர்யா 45 பட வேலைகளையும் கவனித்து வருகிறார்.

நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்ற போட்டோக்களும் வெளியானது. இந்நிலையில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கிருஷ்ணகுமார் என்பவர் சொர்க்கவாசல் கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, சில வருடங்களுக்கு முன் ஒரு லைசன்ஸ் பிரச்சினையால் நான் 15 நாட்கள் சிறையில் இருந்தேன். சைதாப்பேட்டை சப் ஜெயிலில் இருந்தபோது அங்கு கைதிகளுடன் நான் சந்தித்த நிகழ்வுகளை ஒரு ஸ்கிரிப்ட் ஆக எழுதினேன்.

பிறகு வெளியில் வந்ததும் அதை முழு கதையாக ரெடி செய்து ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் கொடுத்தேன். வாய்ப்பு வரும் என நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய கதை நிராகரிக்கப்பட்டதாக அவர்கள் மெயில் அனுப்பினார்கள்.

சொர்க்கவாசல் படத்துக்கு வந்த சிக்கல்

ஆனால் இப்போது சொர்க்கவாசல் ட்ரெய்லரை பார்த்தால் அப்படியே என்னுடைய கதை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஜெயிலில் இருந்து இப்படி கதை எழுதிய பேப்பரை வெளியில் எடுத்து வர முடியாது. ஆதனால் கதையை நான் உல்டாவாக எழுதி காவலர்களின் அனுமதியோடு எடுத்து வந்தேன். அதன் பிறகு சில வருடங்கள் அதை மெருகேற்றி முழு கதையாக தயார் செய்தேன்.

ஆனால் ட்ரீம் வாரியர் என்னிடம் ஸ்கிரிப்டை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.ஜே பாலாஜி பலபேரை ஏறி மிதித்து தான் ஓடிக்கொண்டிருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.

நாளை சொர்க்கவாசல் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கிருஷ்ணகுமார் தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என கூறுவது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News