CWC 5: எண்ணெய் தேச்சுட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் என்று சொல்லுவாங்க. அது விஜய் டிவிக்கு தான் சரியாக இருக்குது. விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு விஜய் டிவியின் டிஆர்பி கோபுர உச்சியில் இருந்தது.
முதல் மூன்று சீசன்களைப் போல் நான்காவது சீசன் அமையவில்லை என்பது பெரும்பாலானோர் கருத்து. விஜய் டிவிக்கு அதைவிட பெரிய அடியாக அமைந்தது மீடியா மேசன் விஜய் டிவியை விட்டு விலகியதுதான்.
நீங்க போனா போங்க நாங்க அதே கான்செப்ட் வைத்து நிகழ்ச்சியை ஓட்டுவோம் என்று விஜய் டிவி கங்கணம் கட்டியது. ஆனால் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் விஜய் டிவி நினைத்த அளவுக்கு வெற்றியாக அமையவில்லை.
என்ன செய்தாலும் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. காமெடிக்காக என்னென்னவோ பாடுபட்ட இந்த சேனல் சமையலில் சீரியஸ் கான்செப்டை கொண்டு வர இந்த வாரம் முயற்சி செய்து இருக்கிறது.
நீங்க பண்ண காமெடிக்கு சிரிப்பே வரலன்னு இப்பவாச்சும் புரிஞ்சதே!
இந்த வாரம் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ நேற்று வெளியாகி இருந்தது. அதில் இந்த வார டாஸ்க்கில் குக்குகள் நேரடியாக மோதிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது. இதுவரை மொத்த குக்குகளும், கொடுக்கப்பட்ட டாஸ்க் மற்றும் கான்செப்ட் வைத்து சமைப்பார்கள்.
அதில் யாருடைய உணவு பெஸ்ட்டாக இருக்கிறதோ அந்த போட்டியாளர் வெற்றி பெறுவார். ஆனால் இந்த வார டாஸ்கில் இரண்டு இரண்டு போட்டியாளர்களாக நேருக்கு நேர் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் மீண்டும் போட்டியிட்டு அதில் யார் முதலில் வருகிறார் என்பது போல் அமைந்திருக்கிறது.
புகழ், ராமர், குரேஷி போன்றவர்கள் தங்களால் முடிந்த வரை காமெடி கான்செப்ட்டை கொடுத்திருந்தாலும் இந்த முறை எதுவுமே செல்லுபடி ஆகவில்லை. இனி காமெடி செட்டாகாது என இப்போதாவது விஜய் டிவிக்கு புரிஞ்சதே என நேயர்கள் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியால் தடுமாறும் விஜய் டிவி
- CWC5-ல் இருந்து விலகிய முக்கிய கோமாளி
- குக் வித் கோமாளி TRP-க்காக என் ஆள் மேல கை வைப்பீங்களா?.
- நடுக்கடலில் தத்தளிக்கும் CWC-5