Connect with us
boomerang-movie

நல்லா யோசிக்கிறாய்ங்க இவிய்ங்க!

Peechaankai-Chimbu-Deven

நல்லா யோசிக்கிறாய்ங்க இவிய்ங்க!

அசால்ட்டாக லெப்ட் ஹேன்டின் உதவியுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ஒருவனுக்கு அந்த லெப்ட் ஹேண்டே எதிரியா மாறுனா என்னாகும்? இந்த யோசனைக்கு வண்ண வண்ண பெயின்ட் அடித்தால், அதுதான் ‘பீச்சாங்கை’ தமிழ் மூவி!

விஷயம் இதுதான்..பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடி வருகிற ஹீரோவை பின்னாலேயே ஜனங்கள் துரத்த…. சரியாக ஒரு போஸ்ட் கம்பியை அந்த இடது கை பற்றிக் கொண்டு விடாமல் முரண்டு பிடிக்க, மாட்டினார் ஹீரோ. அப்புறம் ஒரே தர்ம அடி.

இந்த பீச்சாங்கைக்கும் ஹீரோவுக்குமான பிரச்சனைதான் என்ன? அப்புறம் எப்படி அதை தன் வழிக்கு கொண்டு வந்தார் ஹீரோ. இப்படி போகும் போலிருக்கிறது கதை. ஆர்.எஸ்.கார்த்திக் ஹீரோவாக நடித்திருப்பதுடன் அவரே தயாரித்தும் இருக்கிறார். முதலில் இப்படத்தை ஷார்ட் பிலிம்மாக அசோக் எடுக்கும்போது அதற்குள் ஹீரோவாக வந்தவர், அதுவே வொயிட் ஸ்கிரீனுக்கு பெரிய படமாக தாவும்போது தானே தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் அதற்குள் புகுந்து கொண்டார் அவர்.

படம் எடுக்கறது ரொம்ப கஷ்டங்க. அதுவும் போலீஸ் பர்மிஷன் வாங்கி படம் எடுக்குற கொடுமை இருக்கே… அதுக்கு இந்த பீச்சாங்கைகிட்ட அடிவாங்கியே சாவலாம் என்கிறார் கார்த்திக்.

நல்லவேளையாக இந்தப்படத்தை பற்றிய விஷயங்கள் இன்டஸ்ட்ரியில் பரவ துவங்கிய நேரத்திலிருந்தே ஒரே பாசிட்டிவ் அப்ரோச்கள்! படத்தை முடிச்சுட்டு காமிங்க. நாங்களே ரிலீஸ் பண்றோம் என்று நிறைய பேர் கிளம்பி வருகிறார்களாம். எதுக்கும் பீச்சாங்கை முன்னாடி வந்து இடைஞ்சல் பண்ணாம டீல் பண்ணுங்க கார்த்திக்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top