fbpx
Connect with us

Cinemapettai

நாளை மெர்சல் படம் ஓடுகிற தியேட்டர்களின் முன் ஆர்ப்பாட்டம்-அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி.!

mersal movie review

News | செய்திகள்

நாளை மெர்சல் படம் ஓடுகிற தியேட்டர்களின் முன் ஆர்ப்பாட்டம்-அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி.!

விஜய் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது, எஸ்.டியை தவறாக சித்தரிக்கிறது என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மக்களிடத்தில் தவறாக முன் நிறுத்துகிறது என்றும், இந்து மக்களைப் புண்படுத்துகிற விதமாக இருக்கிறது என்றும் புகார்கள் எழுந்தன.

பாஜக சார்பில், தமிழிசை, எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஜோசப் விஜய் ஒரு கிறித்துவர் அதனால்தான் மோடிக்கு எதிராக இப்படி நடித்து இருக்கிறார் என எச். ராஜா, கூறினார்.

mersal

நெல்லையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லையில் கந்துவட்டி காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகளுக்கு எளிய முறையில் கடன் வழங்க முன் வரவேண்டும்.

mersal vijay

mersal vijay

தென்காசி கோவில் அருகே உள்ள இடத்தை தனியாருக்கு பட்டா போட்டு வழங்க முயற்சி நடக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து வருகிற 30-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்படும். மெர்சல் திரைப்படத்தில் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தை பேசுவது பற்றி பரவலாக குற்றம் சாட்டினர். அதே படத்தில் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் விஜய் பேசியுள்ளார். இதை விஜய் உள்நோக்கத்துடன் பேசியதாகவே நாங்கள் கருதுகிறோம்.

mersal-box

உடனடியாக இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும். நடிகர் கமல்ஹாசன் மக்களுக்காக இறங்கி போராட வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் தனிக்கட்சி தொடங்கலாம். ஆனால் அரசியலில் அவர் வெற்றி பெற முடியாது.

கமல் நாத்திகவாதி, சர்வ தேசியவாதி. ஆனால் நடிகர் ரஜினி ஆன்மீகவாதி, தேசியவாதி. ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியும். அவருக்கு எங்களது ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top