100வது படம் ஏற்றி விட்டவருக்கேன்னு விஜய் கொடுத்த டேட்.. குதிரை ரேஸில் வேகம் இல்லாமல் போன பந்தய ஜாக்கி

Actor Vijay : விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் சமீபத்தில் கோட் படத்தில் இடம் பெற்ற விசில் போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் கோட் படத்திற்கான டேட் கொடுத்திருக்கிறார் விஜய்.

அதாவது விஜய்யின் பூவே உனக்காக, லவ் டுடே, திருப்பாச்சி போன்ற படங்களை தயாரித்தது சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ். இந்நிறுவனத்தின் தலைவர் ஆர் பி சவுத்ரி. 80களில் இருந்து இப்போது வரை வெற்றிகரமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸில் நடிக்க இருந்த விஜய்

ஆகையால் தன்னை சினிமாவில் ஏற்றிவிட்ட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு அவருடைய நூறாவது படத்திற்காக விஜய் டேட் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்திற்கு விஜய்யின் படத்தை தயாரிக்க நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆகையால் அதன் பிறகு விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தனது டேட்டை கொடுத்து விட்டார். மேலும் அடுத்ததாக விஜய்யின் படத்தை டிவிவி என்டர்டைன்மென்ட் தயாரிக்க இருக்கிறது. அதன் பிறகு விஜய் முழு நேரமாக அரசியலில் செயல்பட இருக்கிறார்.

எனவே இனி சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் விஜய் கூட்டணி போடுவது மிகவும் கடினம் தான். இப்போது இந்நிறுவனம் வடிவேலு மற்றும் பகத் பாஸில் இணைந்து நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்