நயன்தாராவின் NO 1 இடத்திற்கு வந்த ஆப்பு.. கார்ப்பரேட் வைத்த செக், கதி கலங்கி போன பாக்ஸ் ஆபிஸ் கடவுள்கள்

Nayanthara: சினிமாவை பொறுத்தவரையில் இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே பழமையான தயாரிப்பு நிறுவனங்கள் கூட இப்போது இருக்கும் இடம் தெரியாத சூழலுக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் டாப் நட்சத்திரங்களுக்கு ஒரு ஆப்பு வைத்திருக்கின்றனர். அதாவது இப்போது உச்சாணி கொம்பில் இருக்கும் ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸை துவம்சம் செய்து வருகிறது. அதனாலயே இவர்கள் பாக்ஸ் ஆபிஸ் கடவுள்கள் போல் பார்க்கப்படுகின்றனர்.

உண்மையோ பொய்யோ டாப் ஹீரோ ஒருவரின் பட வசூல் 500 கோடியை தாண்டி விடுகிறது. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு கௌரவமாகவும் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து அவர்கள் தங்களுடைய சம்பளத்தையும் 100 கோடி 200 கோடி என உயர்த்தி விடுகின்றனர்.

Also read: நயன் மார்க்கெட்டை இழந்ததால் தோல்வியான அன்னபூரணி.. ஓடிடி-யில் வெளிவரும் படம்

இதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். சாட்டிலைட் மற்றும் ஓ டி டி நிறுவனங்கள் கொட்டிக் கொடுக்கும் காசை தான் தயாரிப்பாளர் டாப் ஹீரோக்களுக்கு சம்பளமாக கொடுக்கிறார். அதன்படி நயன்தாரா கூட இப்போது 10 கோடியை தாண்டி சம்பளம் பெற்று வருகிறார்.

இத்தனைக்கும் அவர் எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். சோலோ ஹீரோயினாக நடிப்பதை தான் அதிகமாக விரும்புவார். இப்படி பல கண்டிஷன்கள் போட்டாலும் அவருக்கான மார்க்கெட் குறையவில்லை. ஆனால் அந்த நம்பர் ஒன் இடத்திற்கு இப்போது ஒரு செக் வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது டாப் சேட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் இனிமேல் அதிக விலை கொடுத்து எந்த படத்தையும் வாங்குவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்களாம். இதனால் டாப் பிரபலங்களின் சம்பளம் அதிரடியாக குறைக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு அதிரடி கோலிவுட் திரை உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

Also read: நடிகையை காதலித்து கர்ப்பம் ஆக்கிய பிரபலம்.. ரஜினி பட இயக்குனரின் மற்றொரு முகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்