மணிமேகலைக்கு பயம், விஜய் டிவி தான் அவளை வெளிய போக சொன்னது.. உண்மையை போட்டுடைத்த CWC பிரபலம்

Priyanka vs Manimeghalai: மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை சின்னத்திரை முழுக்க பெரும் புயலாக அடித்துக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன், இதற்கு காரணம் பிரியங்கா தான் என மணிமேகலை கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து பலரும் பேசி இருந்தனர். என்ன இன்னும் பிரியங்காவுக்கு ஆதரவாக யாரும் கிளம்பவில்லை என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. பொறுமையாக அடித்து ஆடும் ஆட்டம் போல் தற்போது பிரியங்காவின் ஆதரவாளர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையை போட்டுடைத்த CWC பிரபலம்

இதில் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட நடிகை ஷகிலா பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஷகிலாவை பொறுத்த வரைக்கும் அவருக்கு மணிமேகலையை நன்றாகவே தெரியும். அதே போல் பிரியங்கா தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று இருக்கிறார்.

அதன் அடிப்படையில் அவர் சேனலிலும் விசாரித்து உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தில் மணிமேகலை மீதுதான் தவறு இருக்கிறது என ஷகிலா உறுதியாக சொல்லி இருக்கிறார்.

மணிமேகலையை பொருத்த வரைக்கும் ஒரு தொகுப்பாளராக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அவர் ஆசைப்பட்ட மாதிரி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆனார். ஆனால் அதே நிகழ்ச்சியில் திறமையான தொகுப்பாளர் பிரியங்காவை எதிர்பார்க்கவில்லை.

பெரும்பாலும் பிரியங்கா பேசுவதில் கண்டெண்டு அதிகமாக இருப்பதால் எடிட்டிங்கில் பிரியங்காவை தான் அதிகமாக காட்டும் படி அமைந்துவிட்டது. இது மணிமேகலைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தொகுப்பாளி னை என்பதை தாண்டி கோமாளிகளுடன் சேர்ந்து ஏதாவது ஸ்கொர் செய்து செய்ய வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்.

ஆனால் அங்கேயும் பிரியங்காவின் குரல் தான் ஓங்கி இருந்திருக்கிறது. இப்படி பிரியங்காவை மட்டுமே சார்ந்து இந்த நிகழ்ச்சி போனால் தன்னுடைய முகம் வெளியில் தெரியாது என்ற பயம் மணிமேகலைக்கு வந்துவிட்டது.

இதனால் பல இடங்களில் பிரியங்கா பேசவே கூடாது என பிரச்சனை பண்ணி இருக்கிறார் மணிமேகலை. இது குறித்து சேனல் தரப்பில் இருந்து மணிமேகலையிடம் பேசும் அவர் அதை காது கொடுத்து கேட்பதா இல்லை.

இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி உங்கள் ஆட்டிடியூடை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுங்கள் என சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் மணிமேகலை கலந்து கொண்ட நிறைய நிகழ்ச்சிகளில் அவர் பிரச்சனை செய்வது நடக்கும் எனவும் ஷகிலா தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

பிரளயத்தை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை

- Advertisement -spot_img

Trending News