Connect with us
Cinemapettai

Cinemapettai

big-boss-kamal-contestants

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பப்ளிசிட்டிக்காக ஹீரோயிசம் பண்ணும் போட்டியாளர்.. வெளியே துரத்த போகும் ஆண்டவர்

பிக்பாஸ் வீடு என்றாலே சண்டைக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை வந்த சீசன்களில் இது போன்ற ஏராளமான சண்டைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த சீசனின் ஆரம்பத்திலேயே சண்டை காட்சிகள் படு பயங்கரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வடிவேலு சொல்வது போல் பிக்பாஸ் வீடு ரத்த பூமியாக மாறி வருகிறது.

அந்த வகையில் இன்று வெளியாகி வரும் ப்ரோமோக்கள் அனைத்திலும் அனல் பறக்கிறது. வார இறுதி நாள் நெருங்குவதால் பிக் பாஸ் வீட்டில் ஜெயிலுக்கு அனுப்ப போகும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடைபெறுகிறது. அதில் இந்த வாரம் முழுதும் சிறப்பாக வேலை செய்த நபர்கள் ரேங்கிங் அடிப்படையில் நிற்கின்றனர்.

Also read:வன்மத்தால் வீழ்த்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. மக்கள் அவரைக் காப்பாற்றுவார்களா?

அப்போது அசீம் ஏட்டிக்கு போட்டியாக பேசுகிறார். அதில் முதலில் ஆயிஷாவை வம்பு இழுக்கும் அசீம் அவரை வாடி போடி என்று ஏக வசனத்தில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான அடுத்த ப்ரோமோவிலும் அவர் விக்ரமனுடன் சண்டைக்கு செல்கிறார்.

அதிலும் அவர் வெள்ளை சட்டை அணிந்து இருந்தால் நீ என்ன பெரிய அரசியல்வாதியா என்றெல்லாம் பேசி பிரச்சினையை கிளப்புகிறார். இதனால் கடுப்பான விக்ரமன் அவரிடம் வாக்குவாதம் செய்ய இருவருக்கும் சண்டை முற்றிப் போகிறது. அதில் அசீம் விக்ரமனை பார்த்து வாடா போடா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார்.

Also read:விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அசீம் ஆர்வக்கோளாறின் காரணமாக ஓவர் சீன் போடுவதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் இப்படி வெறி பிடித்தது போல் சண்டை போட்டு வருவது பலரையும் எரிச்சல் படுத்தி வருகிறது. அந்த வகையில் அசீம் முழு சைக்கோவாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு பேசாமல் பப்ளிசிட்டிக்காக ஹீரோயிசம் பண்ணும் இவரை ஆண்டவர் இந்த வாரம் தட்டிக் கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்து வருகிறது. மேலும் இப்படி எல்லாம் சண்டை போட்டால் தான் பிக்பாஸ் வீட்டில் நீடிக்க முடியும் என்று அவர் பிளான் போடுவதாகவும், விரைவில் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read:வாடி, போடி என அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கத்தி கலாட்டா செய்த ஆயிஷா, ரேங்கிங் டாஸ்கால் வெடித்த பிரச்னை

Continue Reading
To Top