Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-dharsha-gupta

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மார்க்கெட் போன நடிகைக்கு வலை வீசும் காமெடி நடிகர்.. முத்த காட்சிகளுக்கு கொடுக்கும் டார்ச்சர்

சினிமாவில் பல வருடங்களாக காமெடியில் கலக்கி வந்த நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி முன்னேறி இருக்கிறார் அந்த காமெடி நடிகர். ஆரம்பத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த அந்த நடிகர் இப்போது காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்கி கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் இந்த நடிகர் இப்போது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அவர் வேறு யாரும் அல்ல சமீபத்தில் தாதா திரைப்படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை என்று கூறி பிரச்சனையை கிளப்பிய யோகி பாபு தான். அவர் மீது இப்போது அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் அவர் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் தனக்கு பிரபல ஹீரோயின்கள் தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம்.

Also read: யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்

அது மட்டுமல்லாமல் மார்க்கெட் இல்லாமல் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகைகளாக பார்த்து இவர் டார்கெட் செய்து வருகிறாராம். அப்படி இவர் வீசிய வலையில் சிக்கியவர் தான் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற இவர் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இவ்வாறு வாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியாவை யோகி பாபு தன்னுடைய பூமர் அங்கிள் திரைப்படத்திற்காக தேடிப்போய் புக் செய்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் தர்ஷா குப்தாவும் யோகி பாபு உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Also read: தயாரிப்பாளர்களாக விஸ்வரூபம் எடுக்கும் 3 இயக்குனர்கள்.. யோகி பாபுவை வைத்து ஆரம்பிக்கும் அஜித் பட இயக்குனர்

இப்படி அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி ஹீரோயின்களை வளைத்துப் போட்டு வருகிறாராம். இந்த விவகாரம் தான் தற்போது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். ஆனால் இப்போது அவருக்கு புகழும், பணமும் கிடைத்துவிட்டபடியால் அவருடைய ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று சிலர் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் மார்க்கெட் போன ஹீரோயின்களை குறி வைத்து வருவது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் முத்த காட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இயக்குனரை டார்ச்சர் செய்து வருகிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Also read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

Continue Reading
To Top