Connect with us
Cinemapettai

Cinemapettai

vadivelu-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 மணி நேரம்தான் நடிப்பேன்.. வடிவேலு போல தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டும் காமெடி நடிகர்

வடிவேலு போல் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் காமெடி நடிகர்.

தற்போது இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரே நகைச்சுவை நடிகர் இவர் ஒருவர் மட்டும்தான். அதனால் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இவருக்கு காம்பெடிஷனில் இருந்த சூரி இப்போது அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்டார்.

ஆசை யாரை விட்டது இவரும் ஹீரோவாக மண்டேலா, கூர்கா சமீபத்தில் வெளியான  பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அவர் கதாநாயகனாக நடிக்கக்கூடிய படங்களில் காமெடிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Also Read: 3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

ஆகையால் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் யோகி பாபுக்கு தான் என்று தற்போது தமிழ் சினிமாவில் ஒன் அன் ஒன்லி காமெடி நடிகராக கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் யோகி பாபு சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளார். நாட்கணக்கில் சம்பளத்தை வாங்கி வருகிறார்.

ஆனால் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லையாம். படப்பிடிப்புக்கு லேட்டாக வருவது அதே போல் சீக்கிரமாக செல்வதுமாக இருந்து வருகிறார். ஒரு நாளைக்கு மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே நடித்து வருகிறார். இதற்காக ஒரு நாளைக்கு அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார்.

Also Read: சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள். வேறு காமெடி நடிகரும் தற்போது இல்லை. இதன் விளைவாக யோகி பாபு கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போடுகிறார்.

‘ஓவர் திமிரு உடம்புக்கு ஆகாது’ இதே போல் வடிவேலு முன்பொரு காலத்தில் செய்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். வைகைப்புயல் செய்ததை அப்படியே இப்போதைய யோகி பாபு பின்பற்றுவதால் இது எங்க போய் முடிய போகிறதோ என சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

Continue Reading
To Top