காலில் சக்கரம் கட்டி பறக்கும் கமல்.. ஆண்டவரின் அமெரிக்கா ட்ரிப்பில் ஏற்பட்ட மாற்றம்

Kamal : கமல் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். எக்கச்சக்க திரைபட்டாலும் நடித்து வரும் இந்த படத்தில் கமலின் போஷன் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் முடிவுக்கு வர இருக்கிறது.

வேகமாக நடந்து வரும் இந்த படத்தில் படப்பிடிப்பில் சிம்புவின் போர்ஷன் முக்கால்வாசி முடிந்த நிலையில் இன்னும் 5 நாட்கள் மட்டும் மீதம் இருக்கிறது. இந்நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பை முடித்த கையோடு கமல் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு பல புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததில் கமலுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்து வருகிறது. கோட் படத்தில் கூட இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

கமலின் அமெரிக்கா ட்ரிப்பில் ஏற்பட்ட மாற்றம்

இப்போது அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தை கமல் படிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் மூன்று மாதம் அதாவது 90 நாட்கள் இந்த படிப்பை படிக்க கமல் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது 45 நாட்கள் மட்டுமே இதற்காக ஒதுக்கி உள்ளாராம்.

அதற்குள் இந்த படிப்பை முடித்துவிட்டு ஸ்டாண்ட் மாஸ்டராக வலம் வந்த அன்பு மற்றும் அறிவு ஆகியோர் கமலின் 237 வது படத்தை இயக்க உள்ளனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளதால் அதில் கமல் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் தான் கமல் அமெரிக்கா சென்று கற்று வர உள்ள ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றனர். மேலும் கமல் இப்போது படு பிஸியாக இருப்பதால்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட இந்த முறை தொகுப்பாளராக பணியாற்றவில்லை.

ஓய்வில்லாமல் ஓடும் கமல்

Next Story

- Advertisement -