fbpx
Connect with us

தளபதி விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமா? ஆகஸ்ட் 23-ஆம் தேதி இங்க போங்க!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமா? ஆகஸ்ட் 23-ஆம் தேதி இங்க போங்க!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். படத்திற்கு படம் இவரது வியாபாரமும் ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்குத்தான் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சிறுவயதிலிருந்தே தளபதி விஜய் ரசிகராக இருக்கும் ரசிகர்களுக்கு எப்படியாவது தளபதி விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

அவரது சூட்டிங் எங்கேயாவது நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தாலே போதும். கூட்டம் கூட்டமாக அவரை பார்க்க படையெடுத்துச் சென்று விடுவார்கள். அதற்கு நெய்வேலி தான் சாட்சி.

இந்நிலையில் தளபதி விஜய்யை நேரில் சந்திக்க மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. அதிலும் சென்னை ரசிகர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் இதுதான்.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி தளபதி விஜய்யை சென்னை சாந்தோம் சர்ச்சில் பார்க்கலாம். பிரபல நடிகர் அதர்வாவின் தம்பியும், மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இன் மகளும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி அவர்களுக்கு சென்னை சாந்தோம் சர்ச்சில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், தன்னுடைய சொந்த மாமா என்பதால் தளபதி விஜய் கண்டிப்பாக இந்த திருமணத்தில் கலந்து கொள்வார் என்பதும் தெரியவந்துள்ளது.

Continue Reading
To Top