2004ல் நேஹா தூப்பியா நடிப்பில், தீபக் ஷிவ்தாசானி இயக்கத்தில் வெளிவந்து ஹிட் ஆன படம் ஜூலி. காதல் தோல்வியால் வெறுப்பாகி, மும்பை வரும் பெண் அங்கு சந்திக்கும் சங்கடங்கள், அதனால் அவள் எடுக்கும் விபரீத முடிவு, பின் அவள் வாழ்வில் காதல் என்று நகரும் படத்தின் கதை.

இப்பொழுது ராய் லக்ஸ்மியை வைத்து ஜூலி 2 எடுத்துள்ளார் இயக்குனர். அக்டோபர் 6 படம் ரிலீசாக உள்ளது. படுக்கை அரை காட்சிகள்,ஆபாசமான வார்த்தைகள், மிகவும் கவர்ச்சியான உடையுடன்(உடை இல்லாமல்) லட்சுமி ராய், என்று ட்ரைலர் ரிலீஸ் ஆனதுமே வைரலாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

சென்சார் போர்டின் முன்னாள் சார்மனாக இருந்தவர் பாஹலாஜ் நிஹாலினி. தான் அதிகாரியாக இருந்த பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்தவர். அவர் தான் இந்தப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்.இந்நிலையில் தணிக்கைக்கு சென்றது ஜூலி 2, எந்தக்காட்சியையும் கட்டும் செய்ய சொல்லவில்லை, வசனத்தையும் நீக்கச் சொல்லாமல், ஏ சான்றிதழ் வழங்கி விட்டு ஒதுங்கிக்கொண்டனர் அதிகாரிகள். இதனால் வேற சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இந்த ஒர வஞ்சனையை கேள்விப்பட்டதும் கொதித்துப் போய் உள்ளார்கள்.

இந்தப்படத்தின் ட்ரைலர் உங்கள் பார்வைக்கு …