Nivin Pauly : மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டியின் அறிக்கை பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தங்களுக்கு நடந்த இன்னல்களை நடிகைகள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக மலையாளத்தில் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி ஆகியோரின் பெயர்களும் இந்த புகார்களில் அடிபட்டு வருகிறது. அதோடு மோகன்லால் திடீரென தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் சர்ச்சைகளுக்கு பேர் போன பாடகி சுசித்ரா கொடுத்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நிவின்பாலி மீது புகார் வந்த நிலையில், அதை சட்டப்படி சந்திக்க தயார் என்று அவர் வெளிப்படையாக செய்தியாளர்கள் முன்பு பேட்டி கொடுத்திருந்தார்.
நிவின் பாலிக்கு ஆதரவாக பேசிய பிரபலம்
இதுகுறித்து பேசிய பாடகி சுசித்ரா, நிவின் பாலி ஒரு ஜென்டில்மேன், அவருடைய பிரேமம் படம் தமிழில் வெளியான போது இதே போன்ற கணவர் கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் உண்டு. பார்ட்டி என்று கூப்பிட்டால் சிம்பு, தனுஷ் போன்றோர் போல உடனே செல்லக்கூடியவர் அல்ல நிவின் பாலி.
சினிமாவை பொறுத்தவரையில் பார்ட்டி என்பது சில சமயங்களில் கட்டாயம் ஆக இருக்கிறது. அவ்வாறு நிவின் பாலி செல்லும் போது சில பெண்கள் வேண்டும் என்றே அவரை ஆணே இல்லை என்று கேலி செய்கின்றனர். அந்த பெண்களை இதற்கு விருப்பப்படுகிறார்கள்.
அதன் பிறகு என் மீது கை வைத்து விட்டார் என்று இதே போன்ற புகார் கொடுக்கிறார்கள். மேலும் கிழ சிங்கங்கள் மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் தங்கள் மீது உள்ள தவறை திசை திருப்புவதற்காக நிவின் பாலியை சிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் சுசித்ரா. மோகன்லால் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகவும் திடுக்கிடும் தகவலை கூறி இருக்கிறார்.
நிவின் பாலி மீது விழுந்த பழி
- உருவ கேலியால் நொந்துபோன பிரேமம் பட நிவின்பாலி
- நம்ம ரசிகர்களை வளைத்து போட்ட நிவின்பாலியின் 5 படங்கள்
- லியோவில் இந்த 8 பேரை நடிக்க கூப்பிட்டு பின் வெட்டி தூக்கிய லோகி, பெரிய ஏமாற்றத்தில் நிவின்பாலி