விஷக்கிருமி காலில் விழுந்தது எவ்வளவு பெரிய கேவலம்.. ரஜினியை ஆதாரத்துடன் பொளந்து கட்டிய பிரபலம்

Actor Rajini: கடந்த சில தினங்களாக இணையத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது தான். இதனால் ஜெயிலர் வசூலும் சறுக்களை சந்தித்த நிலையில் ரஜினி மீது கடுமையான விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இமயமலையிலிருந்து திரும்பிய ரஜினி இதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தார்.

அதாவது என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது தன்னுடைய வழக்கம் என்று பேசி இருந்தார். இதை ஒரு புறம் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் பலர் மோசமான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது பற்றி சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Also Read : 30 வருட பகை, மீண்டும் ரஜினி படத்தில் சத்யராஜா.? ஒரே பேட்டியில் உச்சி குளிர வைத்ததால் கிடைத்த வாய்ப்பு

அதில் யோகி ஆதித்யநாத் எல்லாம் ஒரு ஆள் என்று அந்த ஆள் காலில் இந்த ஆள் விழுந்திருக்கிறார் என கூறியிருக்கிறார். அதாவது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்படிப்பட்டவர் என்பது தெரியுமா. அவர் கிட்டதட்ட 149 பேரை கொலை செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரது பெயரில் 27 வழக்குகள் இருக்கிறது.

அரசியலில் உள்ளவர்கள் மீது வழக்கு இருப்பது சர்வ சாதாரணம் தான். யோகி மீது இருக்கும் வழக்குகள் மிகவும் மோசமானவை என்று பியூஸ் மானுஷ் கூறியிருக்கிறார். யோகி ஆதித்யநாத் மாதிரி ஒரு விஷக்கிருமியை யாராலும் பார்க்கவே முடியாது. ஏனென்றால் அவர் மீது யார் குற்றம் சுமத்தினாலும் அவர்களை சிறைக்கு தள்ளி விடுவார்.

Also Read : நேருக்கு நேராக ரஜினி, கமல் மோதி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. 890 நாட்கள் திரையில் மிரள விட்ட சூப்பர் ஸ்டார்

இப்படிப்பட்ட ஒருவரின் காலில் ரஜினி விழுவதை நினைத்து துப்ப கூட எனக்கு மனமில்லை என கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலில் உள்ள ஹூக்கும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கட்டளை. அவ்வாறு ரஜினி அந்த பாடலில் கட்டளை போட்டிருக்கிறார்.

மேலும் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் காட்ட மாட்டார். என்ன விஷயம் நடந்தாலும் அதற்கு குரலும் கொடுக்க மாட்டார். தனக்கு தேவை பணம் என்ற செயல்படுபவர் தான் ரஜினி என ஆவேசத்துடன் பேசி இருக்கிறார் பியூஸ் மானுஷ். இந்த வீடியோ தான் தற்போது பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read : ஜெயிலர்ல ரஜினிக்கு 80 கோடி சம்பளம் எல்லாம் பொய் கணக்கு.. எம்மாடியோ லாபத்துல ஷேர் மட்டும் இத்தனை மடங்கா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்