Sivakarthikeyan: சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பிரச்சனை ஓய்ந்திருக்கிறது. அரசியலில் தீவிரமாக களம் இறங்கும் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார். கையில் இருக்கும் தளபதி 69 படத்துடன் அவர் நடிப்புக்கு குட்பை சொல்ல இருக்கிறார்.
ஆனால் 2026 தேர்தலுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமா பக்கம் வருவார் என ஒரு தகவல் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது தளபதியின் இடத்துக்கு போட்டா போட்டி நடக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்ற தகவல் தீயாக பரவியது.
அதை உறுதி செய்யும் பொருட்டு கோட் படத்தில் கூட வெங்கட் பிரபு இப்படி ஒரு காட்சியை வைத்திருந்தார். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் அதை வைத்து ரசிகர்கள் தளபதியின் இடம் சிவகார்த்திகேயனுக்கு தான் என கிளப்பிவிட்டனர்.
சிவகார்த்திகேயன் பற்றி பிஸ்மி சொன்ன தகவல்
இது சர்ச்சையாக பற்றி எரிந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரே ஒரு தளபதி தான் என அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் இத்தனை நாட்கள் இந்த விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எதற்காக அவர் இப்போது மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது.
இதற்கான காரணம் என்ன என்பதை வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் ஒன்றும் லேச பட்டவர் கிடையாது. அவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு தெரியும்.
அடுத்த தளபதி என்ற பட்டத்தை இவர் உண்மையில் விரும்புகிறார். ஆனால் வெளியில் அப்படியெல்லாம் இல்லை என ஒரு பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு கதையை கட்டி விட்டதே கூட அவராக இருக்கலாம்.
மேலும் இப்படி ஒரு விஷயம் பரவுவது சோசியல் மீடியாக்களில் விமர்சனமாக மாறி இருக்கிறது. அதை கவனித்த பிறகு தான் சிவகார்த்திகேயன் மறுப்பது போல் பேசி இருக்கிறார் என பிஸ்மி தெரிவித்துள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் ரசிகர்கள் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என கூறி வருகின்றனர்.
அடுத்த தளபதி சிவகார்த்திகேயனா.?
- சிவகார்த்திகேயனை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் விஜய்
- விஜய் மாதிரி யாராவது இருக்க முடியுமா?
- என்ட்ரி டோக்கனுக்கு பின்னால் எஸ்கே செய்யும் வேலை