பகத் பாசிலை சோலி முடிக்க அந்த 2 பேர் போட்ட பிளான் தான் ஹேமா கமிட்டி.. பத்த வைச்ச பிரபலம்

Mollywood Me Too: மலையாள சினிமா உலகை பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி மக்களே அதிர்ச்சியாக்கிக் கொண்டிருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா நடிகர்களை ஆட்டம் காண வைத்துவிட்டது.

நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்யும் அளவிற்கு இந்த பிரச்சனை பூதாகரமாக இருக்கிறது. பல பிரபலங்களும் இது குறித்து தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகை ராதிகா மீடியா முன்பு இது பற்றி கொடுத்த பேட்டி பெரிய அளவில் வைரலானது.

ராதிகாவை தொடர்ந்து நிறைய பிரபலங்கள் இது குறித்து தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையே பகத் பாசிலை காலி பண்ண தான் என பிரபலம் ஒருவர் சொல்லி இருப்பது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பத்த வைச்ச பிரபலம்

மலையாள சினிமா உலகம் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் நடிப்பு அரக்கனாக மிரட்டி வருபவர் பகத் பாசில். இவர் நடித்தாலே படம் ஹிட்டுதான் என சொல்லும் அளவிற்கு இப்போது சினிமா இருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது இவரை காலி பண்ண மம்மூட்டி மற்றும் மோகன்லால் போட்ட திட்டம் தான் இந்த ஹேமா கமிட்டி அறிக்கை என பின்னணி பாடகி சுசித்ரா பேட்டியளித்திருக்கிறார்.

பாடகி சுசித்ரா தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கடந்த சில வருடங்களாக பிரபலமாகி கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தமிழ் சினிமா நடிகர்களை தாண்டி தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பகத் பாசில் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களை காலி பண்ண போடப்பட்ட திட்டம் தான் இந்த புகார்கள். மேலும் 2017இல் நடிகை பாவனாக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பழிவாங்கத்தான் இப்படி ஒரு கமிட்டியே உருவானது.

இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர்கள் நடிகைகள் ரேவதி மற்றும் பார்வதி தான் என சுசித்ரா பேசியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தமிழில் யுவன் யுவதி படத்தின் ஹீரோயின் ஆக நடித்த ரீமா கலிங்கல் பற்றியும் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார் சுசித்ரா.

இது குறித்து தெரியுமா நேற்று சுசித்ராவை பற்றி ரீமா கற்று கமிட்டியில் புகார் அளித்திருக்கிறார். இது போன்ற சர்ச்சையான விஷயத்தில் பகத் பாசிலை சுசித்ரா கோர்த்து விட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

Next Story

- Advertisement -