பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்குப்பதிவு.. கூடவே இருந்து குழி பறித்த அதிர்ச்சி சம்பவம்!

Armstrong murder case: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபராக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதி காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்துவதுடன் அவருடைய குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையை பாதுகாப்பாக போடப்பட்டிருக்கிறது.

அனுமதி இன்றி நடத்திய ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் விதமாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உட்பட 1500 பேர் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் சேர்ந்து திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் அவரும் பங்கேற்றார்.

இதில் பா ரஞ்சித் கூறியது என்னவென்றால் உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருவதால் அவர்களை வாயடைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பயந்து போய் விசாரணையே முடக்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்தவர்கள் தான் கொலைக்கு உறுதுணையாக இருந்து எதிராளிக்கு உதவி செய்திருப்பதாக ரஞ்சித் அதிர்ச்சி தகவலை கொடுத்திருக்கிறார். இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு மெனக்கீடு செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.

இப்படி நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி கூட்டம் கூடியதற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் பா ரஞ்சித் உட்பட அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story

- Advertisement -