வலிமையில் வாங்கிய அடியே போதும்.. தயாரிப்பாளரை அடக்க அஜித் போட்ட டீல்

எச் வினோத், அஜித் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது. மேலும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு, வாரிசு படத்துடன் மோத இருக்கிறது.

ஆனால் வினோத் அஜித்திற்கு கதை சொல்ல வந்த போது முதலில் இந்த கதையை தான் கூறினாராம். அஜித்துக்கும் இந்த கதை ரொம்பவும் பிடித்துப் போனதால் உடனே இதை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு இடையில் போனி கபூரின் பிடிவாதத்தினால் நேர்கொண்ட பார்வை உருவானது.

Also read: ரேஸில் எப்போதுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. 7 வருடத்திற்கு முன்பே ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய அஜித்

அதற்கு அடுத்து வலிமை படமும் உருவாகி இருக்கிறது. ஆனால் அந்த பட சூட்டிங்கின் போது வினோத் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் போனி கபூரின் தலையீடு தான். அவருடைய இடையூறு அதிகமாக இருந்த காரணத்தினாலேயே வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.

இதனால் வினோத் ரொம்பவும் வருத்தப்பட்டு இருக்கிறார். அதைப் பார்த்த அஜித் துணிவு திரைப்படத்தில் போனி கபூர் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும் அவரை சுதந்திரமாக இந்த படத்தை எடுக்க விடுங்கள் என்று கூறி தயாரிப்பாளரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறார்.

Also read: அஜித் பேரை சொல்லி ஏமாற்றும் சமூக விரோதிகள்.. அவருக்கே ஆபத்தாக முடியும் அபாயம்

அது மட்டுமல்லாமல் இது பற்றி ஒரு டீல் போட்டு அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வினோத்தை சுதந்திரமாக இந்த படத்தை எடுக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு இயக்குனரும் தன் விருப்பப்படி இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அந்த வகையில் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் மேலாகவே இருக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கேற்றார் போல் இயக்குனரும் இந்தப் படத்தில் அஜித் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்கள் வரும் பொங்கலை துணிவு படத்துடன் கொண்டாடுவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also read: வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்