fbpx
Connect with us

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மணிரத்னம் நாயகி

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மணிரத்னம் நாயகி

நடிகையர் திலகம் என்று தமிழ் திரையுலகில் போற்றப்பட்ட நடிகை சாவித்திரி திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிகையாக இருந்தபோதிலும் அவரது சொந்த வாழ்க்கை சோகங்களுடன் தான் இருந்தது. அவரது வாழ்க்கை வரலாறு பல நடிகைகளுக்கு பாடமாக இருந்துள்ள நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்றை விரைவில் இயக்கவுள்ளார்.

சாவித்திரியின் வேடத்தில் நடிக்க அவர் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் தற்போது நடிகை நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தின் திரைக்கதையை முடித்துவிட்டதாகவும், நித்யாமேனனை தவிர மற்ற நடிகை, நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top