திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

வெளிய போ, பொதுக்குழுவில் மோதிக் கொண்ட ராமதாஸ்-அன்புமணி.. பேரனுக்காக மகனை எதிர்க்கிறாரா?

Ramadoss: இது நான் உருவாக்கின கட்சி, நான் தான் எல்லா முடிவையும் எடுப்பேன் என உரக்கச் சொல்லி இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது.

அதை தொடர்ந்து வெளியான வீடியோ தமிழக அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு காரணம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான்.

கட்சிகளுக்குள் உட் பூசல் இருந்தாலும் பொதுவெளியில் அது தெரியாத அளவுக்கு பார்த்துக் கொள்வார்கள்.

பேரனுக்காக மகனை எதிர்க்கிறாரா?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவதில் திமுக கட்சியில் பெரிய அளவில் உடன்பாடு இல்லை என சொல்லப்பட்டது.

ஆனால் வெளியில் அது தெரியாத வண்ணம் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாமக கட்சியில் இது மொத்தமாக தலைகீழாகி விட்டது.

ராமதாஸ் தன்னுடைய பேரனுக்காக மகனையே இன்று கூட்டத்தில் அவமானப்படுத்தி இருக்கிறார்.

ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன் தான் முகுந்தன். இவரை இளைஞர் அணி தலைவராக நியமிப்பதில் அன்புமணிக்கு உடன்பாடு இல்லை.

அன்புமணியை எதிர்த்துக்கொண்டு ராமதாஸ் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்திருக்கிறார்.

இது குறித்து பேசும்போது இது நான் உருவாக்கின கட்சி, நான் எடுப்பது தான் முடிவு ஏறி விடுங்கள் என்று கூட சொல்லி இருக்கிறார்.

அன்புமணி தன்னுடைய கையில் இருந்த மைக்கை சடார் என கீழே வைக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் பனையூரில் தனக்கு புதிதாக அலுவலகம் திறந்திருப்பது அறிவித்து யாருக்கேனும் ஏதாவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அங்கே வாருங்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.

இன்னும் ஒரு வருடத்தில் தமிழக சட்டசபை தேர்தல் வரை இருக்கும் நிலையில் பாமக கட்சியின் விரிசல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News