Connect with us

Cinemapettai

பெற்றோரால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. விசாரணையில் கிடைத்த உருக்கமான கடிதம்

keerthana-suicide

Tamil Nadu | தமிழ் நாடு

பெற்றோரால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. விசாரணையில் கிடைத்த உருக்கமான கடிதம்

சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை செய்பவர் சாமுவேல். திருவொற்றியூரை சேர்ந்த இவருக்கு கீர்த்தனா(18) என்ற மகள் உள்ளார். அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கீர்த்தனா, எப்பொழுதும்போல் அறையில் சென்று பூட்டிக் கொண்டார். பெற்றோர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து விட்டு விட்டனர். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டிற்கு பின்னால் உள்ள ஜன்னலில் பார்த்தபோது கீர்த்தனா தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் பதறிப்போய் கதறித் துடித்த பெற்றோரைப் பார்த்து அந்த பகுதியை கண்ணீரில் ஆழ்ந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கீர்த்தனாவின் அறையில் சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில் தன் பெற்றோர் கீர்த்தனாவை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதாகவும், ஆனால் நடந்து முடிந்த பருவத் தேர்வை சரியாக எழுதவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி இருக்கிறார்.

இருந்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top