Sports | விளையாட்டு
பானிபூரி விற்ற பையன் அடித்த இரட்டை சதம்.. கலங்கிய பிசிசிஐ.. யார் அவர்?
இந்தியாவில் உள்ள உள்ளூர் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடந்து வருகிறது. இதில் 17 வயது மும்பை அணியை சேர்ந்த பையன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து மொத்த கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இவர் மற்ற வீரர்களைப் போல் குடும்ப உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வரவில்லை. மிகவும் அடிமட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து முன்னாள் இந்தியா-ஏ அணி வீரர் வாலா சிங் என்பவரின் பார்வையில் பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ளார்.
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த யாஷஸ்வி, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் பகுதி நேரமாக பானிபூரி விட்டு தனது வயிற்றை கழுவிக் வந்துள்ளார். மேலும் உறவினர்களின் ஆதரவு கொஞ்சம்கூட இல்லை.
கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் எப்படி முன்னுக்கு வருவது என யோசித்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல் கிரிக்கெட் தான் வாழ்க்கை என தொடர்ந்து முயற்சி செய்ததால் இன்று இத்தகைய சாதனையை அவனால் செய்ய முடிந்தது.
நேற்று நடந்த மும்பை மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு எதிரான போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குறைந்த வயதில் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
