1989-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இப்படத்தில் கமல் அப்பு என்ற குட்டை மனிதராக நடித்திருந்தார். கிராபிக்ஸ் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்தில் கமல்ஹாசன் இந்த வேடத்தில் தனது உடலை வருத்தி நடித்திருந்தனர். அந்த வேடத்தில் அவர் எப்படி நடித்தார் இன்னமும் பல பேருக்கு தெரியாத மர்மமாகவே நீடிக்கிறது.

அதிகம் படித்தவை:  அரசின் முதல் அடி ஆரம்பம்! கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் கைது!

இந்நிலையில், கமல் நடித்த அப்பு வேடத்தில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கான் நடிக்கவிருக்கிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் அந்த படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்துவிட்டார்கள். அதன்படி, 2018-ம் ஆண்டும் டிசம்பர் 21-ந் தேதிதான் இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 வருடங்கள் இப்படத்தை எடுக்கப்போவது மட்டும் உறுதியாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  கமலின் ‘இந்தியன் 2’வை பின்னுக்கு தள்ளிய ‘சபாஷ் நாயுடு’

இதில் கமல்ஹாசனைப் போல் ஷாருக்கான் தனது உடலை வருத்தி நடிக்கவிருக்கிறாரா? அல்லது மாறியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் கிராபிக்ஸ் முறையில் அவரை மாற்றப்போகிறார்களா? என்பது பிறகுதான் தெரியவரும்.