9வது நாளில் மந்தமான ஜெயிலர் வசூல்.. 500 கோடியை நெருங்க தடுமாறும் டைகர் முத்துவேல் பாண்டியன்

இப்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் ஜெயிலர் படத்தின் வசூல் தான். இமாலய வெற்றி பெற்ற ஜெயிலர் வசூலை வாரி குவித்து வந்தது. முதல் வாரத்திலேயே நல்ல லாபத்தை பெற்ற இப்படம் ஒன்பதாவது நாளில் சரிவை சந்தித்து இருக்கிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் ரஜினி, சிவராஜ் குமார், மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ரஜினி இதற்கு முன் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தார். அதன்படி முதல் நாளிலிருந்து நல்ல வசூலை இப்படம் பெற்று வந்தது. ஒரு வாரத்தை கடந்த நிலையில் உலகம் முழுவதும் 375 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

Also Read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

மேலும் இன்னும் சில நாட்கள் வசூல் மழையில் ஜெயிலர் படம் நினையும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்பதாவது நாள் வசூலில் சறுக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் வசூல் விஸ்வரூபம் பெற்ற நிலையில் மறுநாளில் இருந்து மந்தமாக தான் சென்று வருகிறது. அதன்படி ஒன்பதாவது நாளான நேற்று உலகம் முழுவதும் வெறும் 25 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

மேலும் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 430 கோடி வசூல் செய்து இருக்கிறது. பொன்னியின் செல்வன் வசூலை ஜெயிலர் முறியடிக்குமா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் இப்போது லியோ படத்திற்கு தான் ஹைப் அதிகமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இனிவரும் நாட்களில் ஜெயிலர் வசூல் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

ஆகையால் 500 கோடி வசூலையே ஜெயிலர் படம் தொடுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இப்போதே போட்ட பட்ஜெட்டை காட்டிலும் சன் பிக்சர்ஸ் அதிக லாபம் அடைந்திருக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் ஜெயிலர் செய்யும் வசூல் அனைத்துமே லாபம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஜெயிலர் நஷ்டம் என்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் இன்னும் சில நாட்கள் இதே வசூலை நீடித்தால் மேலும் நல்ல லாபம் கிடைக்கும். ஜெயிலர் படத்திற்கு போட்டியாக வேறுபடங்கள் வெளியாகாதால் வசூலை குவித்து இருக்கிறது. ஆனாலும் 500 கோடியை நெருங்க முடியாமல் தடுமாறுகிறார் ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன். வரும் நாட்களில் வசூல் ரிப்போர்ட்டை பொறுத்துதான் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பது தெரிய வரும்.

Also Read: டாப் ஹீரோவின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெயிலர்.. நூறிலிருந்து 650 தியேட்டர்களை உயர்த்திய சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்