Connect with us
boomerang-movie

96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா ?

News | செய்திகள்

96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா ?

’96

1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். தமிழகத்தில் ராம் மற்றும் ஜானு இன்று செல்லப்பெயர் ஆகிவிட்டது.

96

இந்தியாவின் டாப் 10 படங்களின் IMDB லிஸ்டில் மூன்றாம் இடம் பிடித்தது. இப்படத்தின் ரி மேக் குறித்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

99 கன்னடம்

golden star ganesh

அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி விட்டது. கன்னட சினிமாவில் இப்படத்தின் தலைப்பு 99 . படத்தை ப்ரீத்தம் குப்பி என்பவர் தான் இயக்குகிறார். ஹீரோவாக கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் ஹீரோயினாக பாவனா நடிக்கவுள்ளனர். ராமு என்டர்ப்ரிஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 17 துவங்குமாம்.

bhavana

தெலுங்கு

sharwanand

இப்படத்தின் ரிமேக் உரிமையை தில் ராஜு வாங்கியுள்ளார். முதலில் அல்லு அர்ஜுன் என்றனர் பின்னர் நானி, கோபிசந்த் என்று கூறப்பட்டு இறுதியில் சர்வானந்த் இடம் படம் சென்றுள்ளது என்கின்றனர். மேலும் சமந்தா தான் ஹீரோயின் என்கின்றனர். ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய பிரேம்குமார் தான் இப்படத்தையும் இயக்குகிறாராம். அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

samantha

samantha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top