Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 ரீமேக்கில் நடிக்க போகும் பிரபல நடிகர்.. தாக்கு பிடிப்பாரா?
96 ரீமேக்கில் நடிக்க போகும் பிரபல நடிகர்
96 படத்தின் மாபெரும் வெற்றி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கும் மேல் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தன் குழந்தைப் பருவத்தில் செய்த காதலை வெளிப்படுத்தும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலை எல்லா மனிதர்கள் வாழ்க்கையிலும் தாண்டி சென்று இருப்பதால் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்று அப்படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். தமிழ் படத்தை இயக்கிய அதே இயக்குனர் பிரேம்குமார் தான் தெரியும் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக தெலுங்கு படங்களின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.

96
விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவுக்கு படத்தில் ஏற்பட்ட அதே கெமிஸ்ட்ரி அல்லு அர்ஜுன் மற்றும் இப்படத்தில் வரும் ஹீரோயினுக்கு அமையுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். எந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் மொழிபெயர்த்து நடிக்கும்போது 100% கிடைத்த வெற்றி கிடைக்குமா என்பது கஷ்டம்தான். ஆனாலும் பொறுத்திருந்து பார்க்கலாம் மற்றும் இப்படம் 2019ல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
